For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கெட்ட வார்த்தைகள் நிரம்பி வழியும் எம்டிவி 'ஸ்பிளிட்ஸ்வில்லா'... வலுக்கிறது எதிர்ப்பு!

Google Oneindia Tamil News

பனாஜி: எம்டிவியின் ஸ்பிளிட்ஸ்வில்லா நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோவாவைச் சேர்ந்த இந்து அமைப்பு ஒன்று போர்க்கொடி உயர்த்தியுள்ளது.

ஸ்பிளிட்ஸ்வில்லா நிகழச்சி ஆபாசத்தையும், அசிங்கத்தையும் அரங்கேற்றி வருவதாக ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி என்ற அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஸ்பிளிட்ஸ்வில்லா என்பது ஒரு ரியாலிட்டி ஷோவாகும். இதற்குத்தான் தற்போது கோவாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கலாச்சார சீரழிவு

கலாச்சார சீரழிவு

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், குட்டைப் பாவாடை, பிகினிகள், அரைகுறை ஆடைகளுடன் அழகிகள் இதில் பங்கேற்கிறார்கள். இது நமது கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக உள்ளது.

தீய பாதையில் இளைஞர்கள்

தீய பாதையில் இளைஞர்கள்

இந்திய இளைஞர்களின் மனதைக் கெடுத்து அவர்களைத் தீய வழிக்கு இட்டுச் செல்வதாக உள்ளது. இதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.

சென்சார் வேண்டும்

சென்சார் வேண்டும்

டிவிகளில் வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கும் பிற நிகழ்ச்சிகளுக்கும் சென்சார் முறை கொண்டு வரப்பட வேண்டும்.

கோவா மாடல் பேச்சு தப்பு...!

கோவா மாடல் பேச்சு தப்பு...!

இந்த நிகழ்ச்சி குறித்து கோவாவைச் சேர்ந்த மாடல் அழகி ஸ்கார்லெட் ரோஸ் கூறியுள்ள கருத்துக்கள் ஆபாசத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக உள்ளது. சுதந்திரமாக வாழ வழி விட வேண்டும் என்கிறார் அவர். அவர் கூறும் சுதந்திரம் என்பது, குட்டைப் பாவாடை, நீச்சல் உடை, அசிங்கமான உடல் அங்கம் தெரியும்படியான டிரஸ் போடுவதுதான். இது மேற்கத்திய மக்களின் மன நிலை, அவர்களது கலாச்சாரம். அதற்கு இந்திய கலாச்சாரத்திலும், சமூகத்திலும் இடம் இல்லை.

ஏற்கனவே பாலியல் கொடுமைகள் அதிகம்

ஏற்கனவே பாலியல் கொடுமைகள் அதிகம்

இந்தப் பிரச்சினை சமூகம் சார்ந்ததாகவும், கலாச்சாரம் சார்ந்ததாகும். நமது நாட்டில் ஏற்கனவே பாலியல் பலாத்காரங்கள், பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் இப்பபடிப்பட்ட நிகழ்ச்சிகள் அவற்றை அதிகரிக்கவே செய்யும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சிங்கத்தை எதிர்த்தவர்கள்

சிங்கத்தை எதிர்த்தவர்கள்

இந்த அமைப்பு ஏற்கனவே அஜய் தேவ்கன் நடித்த சிங்கம் ரிட்டர்ன்ஸ் படத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அப்படத்தில் இந்து கடவுள்களை இழிவுபடுத்துவது போல காட்சிகள் உள்ளதாக இந்த அமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

7வது சீசன்

7வது சீசன்

எம்டிவியின் ஸ்பிளிட்ஸ்வில்லா இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது. இந்த ஆண்டு நடைபெறுவது 7வது சீசன் ரியாலிட்டி ஷோ ஆகும்.

டேட்டிங் ரியாலிட்டி!

டேட்டிங் ரியாலிட்டி!

இது ஒரு டேட்டிங் ரியாலிட்டி ஷோவாகும். அமெரிக்காவில் ஒளிபரப்பாகி வரும் பிளேவர் ஆப் லவ் என்ற ஷோவின் இந்தியத் தாக்கம்தான் இது.

முதலில் கோவாவில்.. இப்போது ஜெய்ப்பூரில்

முதலில் கோவாவில்.. இப்போது ஜெய்ப்பூரில்

இந்த தொடரின் முதல் சீசன் கோவாவில் நடந்தது. அடுத்த சீசனும் கோவாவில்தான். 3வது சீசன் பட்டாயாவிலும், 4வது சீசன் துபாயிலும், 5வது சீசன் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவிலும், 6வது சீசன் கேரளாவிலும் நடந்தது. 7வது சீசன் ஜெய்ப்பூரில்.

காதலைத் தேடி

காதலைத் தேடி

இந்த ஷோவில் இளம் பெண்களும், இளைஞர்களும் மட்டுமே பங்கேற்பார்கள். அவர்களுக்குள் பொருத்தமான ஜோடியை அவர்கள் தேடி செட்டிலாக வேண்டும். இதற்காக அவர்களுக்குள் பல போட்டிகள் நடத்தப்படும்.

காதலும், காமமும்

காதலும், காமமும்

காதல் தொடர்பானவை அத்தனையுமே. கூடவே காமமும் சேர்ந்து கொள்ளும். அதை வைத்து பொருத்தமானவர்கள் யார் என்பதை ஆணும், பெண்ணும் உணர்ந்து, புரிந்து கூட வேண்டும்.

சரி ஜோடிக்குப் பரிசு

சரி ஜோடிக்குப் பரிசு

இறுதியில் சரியான ஜோடியாக தேர்வாகும் ஆணுக்கும், பெண்ணுக்கும் வெற்றியாளர் பட்டம் கிடைக்கும். மொத்தம் 16 பேர் இதில் பங்கேற்பார்கள். அதில் 8 பேர் ஆண்கள், 8 பேர் பெண்கள்.

கெட்ட வார்த்தைகள்.. அரை குறை டிரஸ்கள்

கெட்ட வார்த்தைகள்.. அரை குறை டிரஸ்கள்

இந்த ஷோவில் பங்கேற்கும் ஆண்களும், பெண்களும் நீட்டாக டிரஸ் செய்ததாக வரலாறே கிடையாது. எல்லாமே கவர்ச்சிதான். பேச்சிலும் சரி உடையிலும் சரி, நடை உடை பாவனைகளிலும் சரி கவர்ச்சி பொங்கிப் பெருக்கெடுத்து ஓடும். கெட்ட வார்த்தைகளும் கூட சரமாரியாக சரளமாக பேசப்படும். முற்றிலும் ஏ கிளாஸ் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது!

English summary
A Goa-based Hindu group has now demanded a ban on the popular reality show MTV Splitsvilla, accusing the showmakers of eroding culture and promotiing "short skirts, strapy dress and bikinis". In a statement issued here Monday, the Hindu Janajagruti Samiti (HJS) said that the show "erodes culture and morality of the Indian youth" and even demanded censorship for TV shows.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X