For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேற்கு வங்கத்தில் சரித்திரம் படைத்தது பாஜக! சட்டசபை தேர்தலில் முதல் முறையாக வெற்றி!!

By Mathi
Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பாரதிய ஜனதா கட்சி முதல் முறையாக அம்மாநில சட்டசபைக்குள் நுழைகிறது.

10 மாநிலங்களில் 33 சட்டசபை மற்றும் 3 லோக்சபா தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் மேற்கு வங்கத்தின் பசிர்காட் தெற்கு, கொல்கத்தாவின் செளரிங்கீ ஆகிய தொகுதிகளும் அடக்கம்.

BJP enters West Bengal assembly, wins Basirhat South

இந்தியா- வங்கதேச எல்லையோரத்தில் 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள தொகுதி பசிர்காட் தெற்கு. இத்தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் சாமிக் பட்டர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம் மேற்கு வங்க அரசியல் வரலாற்றில் சட்டசபை தேர்தலில் முதல் முறையாக பாஜக வென்றுள்ளது.

இத்தொகுதியில் 2வது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸும் 3வது இடத்துக்கு காங்கிரஸும் தள்ளப்பட்டது. கொல்கத்தாவின் செளரிங்கீ தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

English summary
The Bharatiya Janata Party created a history of sorts in West Bengal by winning its first ever Assembly seat in the state as its candidate from Basirhat South in North 24 Parganas in the Indo-Bangladesh border constituency, Samik Bhattacharjee, won the elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X