For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடைத் தேர்தல் தோல்வி- காங்கிரஸைப் போல விமர்சிக்காதீங்க.. சிவசேனாவுக்கு பாஜக பதிலடி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இடைத்தேர்தல்களில் தோல்வி அடைந்ததால் காங்கிரஸ் கட்சியைப் போல கூட்டணிக் கட்சிகளும் விமர்சிக்கக் கூடாது என்று சிவசேனாவுக்கு பாரதிய ஜனதா பதிலடி கொடுத்துள்ளது.

10 மாநிலங்களில் 33 சட்டசபை மற்றும் 3 லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்த தேர்தல் தோல்வி, பாஜகவுக்கு சரியான பாடம் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்திருந்தது.

இந்த நிலையில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனாவும் கூட தமது அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில், பாஜகவுக்கு மக்கள் தந்துள்ள பாடம் இது.. இதனில் இருந்து பாஜக கற்றுக் கொள்ள வேண்டும் என்று குட்டியது. இது பாஜகவை கோபமடையச் செய்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் ஷானவாஸ் உசேன், கூட்டணிக் கட்சிகளாக இருந்து கொண்டே காங்கிரஸ் கட்சியினர் பயன்படுத்துகிற வார்த்தைகளைக் கொண்டு விமர்சிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

இதற்கு சிவசேனாவின் சாம்னா என்ன பதில் வைத்துள்ளதோ?

English summary
BJP's Shahnawaz Hussain hits back at Shiv Sena's article, says allies shouldn't be backing words of Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X