For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினி என்ற பின்வாசல் வழியாக தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் பாஜக!

By Shankar
Google Oneindia Tamil News

ரஜினி அரசியலுக்கு வருவாரா? சலித்துப் போன கேள்வி இது. அவரும் இந்தக் கேள்விக்கு சலிக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் இப்போது அவர் உறுதியான ஒரு பதிலை சொல்லியே தீர வேண்டிய சூழல்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ள சூழலைப் பயன்படுத்திக் கொள்வதில், தமிழகத்தின் 'ஜீரோ'வான பாஜக படாத பாடுபடுகிறது.

BJP tries to enter TN through 'back gate' Rajini

இனி ஜெயலலிதா அவ்வளவுதான் என்பது அக்கட்சியின் ஏகோபித்த கருத்து. எனவே ரஜினியை எப்படியாவது உள்ளே இழுப்பது அல்லது அவரை தனிக்கட்சியாவது தொடங்க வைத்து இணைந்து நிற்பது என்ற தங்கள் விருப்பத்தை அவர் மேல் திணிக்க ஆரம்பித்துள்ளனர்.

நீங்க அரசியலில் ஈடுபட இது தகுந்த நேரம், எனவே கண்டிப்பாக அரசியலுக்கு வாங்க என நேரடியாகக் கூறிவரும் பாஜக, தங்கள் கட்சிக்கு அவர் வந்தால் அவரே தமிழக முதல்வர் பதவிக்கான வேட்பாளர் என எப்போதோ கூறிவிட்டது. இப்போது ஜெயலலிதா சிறைக்குப் போனதும் தங்களை அப்ளிகேஷனை புதுப்பித்துள அனுப்பியுள்ளது அக்கட்சி.

ரஜினிக்கு அரசியல் புதிதல்ல. 996-ல் அவர் உண்மையிலேயே முதல்வராகியிருப்பார். ஆனால் பெயர் கெட்டுப்போயிருக்கும், உடனிருந்த கூட்டணிக் கட்சிகளால் என்பதை உணர்ந்து விலகி நின்றார். அதன் பிறகு அதுபோன்றதொரு சூழல் அமையவில்லை.

இப்போது அதற்கான சூழல் இருக்கிறதா?

ரஜினி பாஜவில் சேர்ந்தாலோ, தனிக்கட்சி ஆரம்பித்து பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலோ நிச்சயம் பாஜவுக்கு மட்டுமே ஆதாயமாய் அமையும். அதேநேரம் ஜெயலலிதா ஒருவேளை ஜாமீனில் வந்து, டான்சி வழக்கை உடைத்தது போல இந்த வழக்கையும் உடைத்து தேர்தலில் நின்றால் நிச்சயம் அவரை வெல்வது யாருக்குமே கடினம்.

மக்கள் மனதில் அப்படியொரு இமேஜ் இப்போது ஜெயலலிதாவுக்கு உள்ளது. இன்றைய சூழலில் அவர் மீது விமர்சனம் இருக்கலாம். ஆனால் நிச்சயம் யாருக்கும் ஆத்திரம் இல்லை. வழக்குகளை வென்று அவர் மீண்டும் மக்களைச் சந்திக்கக் கிளம்பினால் அபார ஆதரவு அலை வீசும் என்பதில் சந்தேகமில்லை.

ரஜினியை பின்வாசலாகப் பயன்படுத்தி எப்படியாவது தமிழகத்தில் தனது நோஞ்சான் இமேஜை மாற்றிக் கொள்ளலாம் என பாஜக பிரம்மப் பிரயத்தனம் செய்கிறது. அரசியலில் நேரடியாக நுழையாமலே அரசியல் செய்பவரான ரஜினிக்கு இது புரியாதா என்ன?

இன்னொன்று ரஜினியை ஆதரிப்பவர்களில் பெருமளவினர் திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்தான். பாஜக என்ற காவிச் சாயத்தைப் பூச முயன்றால், இந்த ஆதரவில் பெருத்த விரிசல் விழும் என்பதும் ரஜினிக்குத் தெரியாததல்ல!

English summary
BJP leaders are trying to use Rajini as their back gate to strengthen their party in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X