For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீங்க ப்ரீத்தி ஜிந்தா ரசிகராக இருக்கலாம்.. ஆனால் அவர் யாருடைய ரசிகர் தெரியுமா..?

Google Oneindia Tamil News

வாரணாசி: நடிகை ப்ரீத்தி ஜிந்தா பகிரங்கமாக நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதுவும் அவர் போட்டியிடும் வாரணாசியில் நின்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

ப்ரீத்தியின் இந்த ஆதரவால் பாஜக வட்டாரம் குஷியாகியுள்ளது. ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு ப்ரீத்தி ஜிந்தா, மோடியை நேரில் பார்த்து ஆதரவைத் தெரிவித்தவர்தான் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் வாரணாசி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆம் ஆத்மிக்கு மோடியே சிறந்தவர் என்று கூறினார். தான மோடியை மட்டுமே சிறந்த நிர்வாகியாக, பிரதமர் பதவிக்குச் சரியானவராக பார்ப்பதாகவும் கூறினார்.

நான் மோடி விசிறியாக்கும்..

நான் மோடி விசிறியாக்கும்..

ப்ரீத்தி கூறுகையில், நான் அவருடைய பரம ரசிகை. அவர் நிச்சயம் இங்கு வெல்வார். அவர் இங்கு பிரசாரத்திற்கு வரவே தேவையில்லை.

சாமி கும்பிடத்தான் வந்தேன்

சாமி கும்பிடத்தான் வந்தேன்

நான் இங்கு சாமி கும்பிடத்தான் வந்தேன். வேறு எதற்காகவும் வரவில்லை.

7 வருஷத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன்

7 வருஷத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன்

நான் 7 வருடத்திற்கு முன்பே பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் மோடி என்று கூறி விட்டேன். மக்கள் அவரை விரும்புகிறார்கள்.

ஆம் ஆத்மியை விட

ஆம் ஆத்மியை விட

ஆம் ஆத்மி கட்சியையும் நான் விரும்புகிறேன்தான். ஆனால் அவர்கள் அனுபவம் இல்லாதவர்கள். அவர்களுக்கு இன்னும் அவகாசம் தேவை. அவர்களுடன் ஒப்பிட்டால் மோடிதான் பெஸ்ட் என்றார் ப்ரீத்தி.

டிவிட்டரில் ஒரு பேச்சு

டிவிட்டரில் ஒரு பேச்சு

அதேசமயம் டிவிட்டரில் அவர் எழுதுகையில், நான் எந்தக் கட்சிக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்யவில்லை. யாருக்கும் ஆதரவாகவும் நான் பிரசாரம் செய்யவில்லை. செய்யவும் மாட்டேன் என்று வேறு மாதிரியாக கூறியுள்ளார் ப்ரீத்தி.

English summary
Bollywood actress Preity Zinta's recent remark on Narendra Modi seems to have worked as icing on the cake for the prime ministerial candidate of the Bharatiya Janata Party (BJP) ahead of the crucial election fight in Varanasi. The actress, who visited Varanasi, said she prefers Modi than AAP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X