For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் கால தாக்குதல்களை தடுக்க எல்லை பாதுகாப்பு தீவிரம் – மத்திய அரசு உத்தரவு

|

டெல்லி: இந்தியாவின் மிக பதட்டமானவை எனக் கருதப்படும் எல்லையோர மாநிலங்களில் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடர்ந்து நான்கு கட்டமாக நடைபெற இருக்கின்றது.

இதை ஒட்டி "பாதுகாப்பு ஏற்பாடுகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்" என ராணுவப் படையினருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 24 முதல் நான்கு கட்டங்களாக நடக்க உள்ளது.

Border army security increased for polls in Border States….

உள்துறை அமைச்சகம் உத்தரவு:

பஞ்சாப் , உத்ரபிரதேசம், பீகார், ஜம்மு - காஷ்மீர், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் மட்டும் 170 தொகுதிகள் உள்ளன. அப்படிப்பட்ட எல்லையோர பகுதிகளை உன்னிப்பாக கண்காணிக்கும்படி எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவ படைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் கால குற்றங்கள்:

நம் நாட்டில் தேர்தல் நடக்கும் சமயத்தில் போலி ரூபாய் நோட்டுகள் கடத்தல், போதை மருந்து ஆயுதங்கள் கடத்தல் போன்ற குற்றங்களில் அண்டை நாடுகளைச் சேர்ந்த சமூக விரோதிகள் ஈடுபடுவது வழக்கம்.

எல்லை பாதுகாப்பு தீவிரம்:

அத்தகைய நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்கும் வகையில் ரோந்து பணியை தீவிரமாக்கும்படி எல்லை பாதுகாப்பு படையினர் இந்தியா - வங்கதேச எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள "சாஸ்ட்ரா சீமா பால்" படையினருக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமூக விரோதிகள் ஊடுருவல்:

இன்று துவங்கி மே 12 வரை நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைவரது கவனமும் தேர்தலில் இருக்கும் போது இந்தியாவுக்குள் ஊடுருவி குற்றச் செயல்களை சமூக விரோதிகள் அரங்கேற்றலாம் என்பதால் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

English summary
Indian Border States face its Lokshabha election from April 24 onwards. So, the government increased the border army security into tight position to avoid the terrorist attacks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X