For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா வருகிறார் ஜான் கெர்ரி... பேச்சுவார்த்தை குறித்து சுஷ்மா, ஜெட்லியுடன் மோடி ஆலோசனை!

Google Oneindia Tamil News

டெல்லி: இன்று இந்தியா வருகை தரும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான்கெர்ரியுடனான பேச்சுவார்தையில் இடம்பெறவுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

எரிசக்தி மற்றும் பருவநிலை மாற்றம், கல்வி மற்றும் வளர்ச்சி, பொருளாதாரம், வணிகம், விவசாயம், அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் இந்திய, அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தலைமையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

Breaking the ice with Narendra Modi?

இந்த ஆலோசனையின் போது இந்திய, அமெரிக்க உறவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தனது இந்திய பயணத்தின் போது ஜான் கெர்ரி, பிரதமர் மோடியை சந்தித்து அவரது அமெரிக்க பயணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக அமெரிக்க அதிபர் ஒபாமவின் அழைப்பை ஏற்று, செப்டம்பர் மாத இறுதியில் மோடி அந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்வார் என த் தெரிகிறது.

English summary
US Secretary of State John Kerry will be coming to India Today. Tomorrow he will holding a talk to discuss about the India - America relationship.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X