For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறார் நீதிச் சட்டத் திருத்த மசோதா: சட்ட அமைச்சகம் அனுமதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட கடும் குற்றங்களில் ஈடுபடுவோர் 16 வயதுக்கு மேல் இருந்தால், அவரை பெரியவராக கருதி தண்டனை அளிக்கும் வகையில், சிறார் நீதிச் சட்டத் திருத்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மத்திய சட்ட அமைச்சகம் அனுமதி அளித்து, மற்ற அமைச்சகங்களின் கருத்தை கேட்டு சுற்றுக்கு அனுப்பியுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களின் குற்றங்களை மட்டுமே நீதிமன்றங்களில் விசாரித்து தண்டனை வழங்க முடியும்.

18 வயதுக்கு குறைந்தவர்கள் சிறார்களாக (மைனர்) கருதப்பட்டு, சிறார் நீதி வாரியத்தில் விசாரிக்கப்படுகின்றனர். அவர்கள் கடும் குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும் சிறார் நீதிச் சட்டம் - 2000ன் படி, அவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்க முடியும். இந்த 3 ஆண்டுகளும் அவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் தங்கினால் போதும்.

மைனர் குற்றவாளிக்கு சலுகை

இந்த சலுகை இருப்பது தெரிந்தே, 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட பலர் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதாக பெண்கள் அமைப்புகள் புகார் கூறுகின்றன.

மாணவி பலாத்காரம்

டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார சம்பவத்தில், 18 வயதுக்கு உட்பட்ட ஒருவர் கொடூரமாக நடந்துகொண்டபோதிலும் அவருக்கு 3 ஆண்டுகள் தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது.

தண்டனைச்சட்டத்தில் திருத்தம்

இந்நிலையில் கொடூர குற்றங்களில் ஈடுபடும் சிறார்களுக்கு, சிறார் நீதிச் சட்டப் பாதுகாப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கருத்து வலுப்பெறத் தொடங்கியது.

மேனகா காந்தி

இந்த நிலையில் சிறார் நீதிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இத்துறையின் அமைச்சர் மேனகா காந்தி, புதிய வரைவு மசோதாவை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார்.

கொடிய குற்றங்கள்

வரைவு மசோதாவின்படி, கொலை, அமில வீச்சு, பாலியல் பலாத்காரம் ஆகிய கொடிய குற்றத்தில் ஈடுபடுவோர் 16 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், அவர்களது குற்றத்தன்மை மற்றும் மனநிலை குறித்து விசாரணை நடத்தி ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்கப்படும்.

தூக்கு, ஆயுள் கிடையாது

விசாரணைக்குப் பின், சிறார் நீதி வாரியம் அவரை பெரியவராக கருதி, வழக்கை வழக்கமான நீதிமன்றத்தில் விசாரிக்க பரிந்துரை செய்யும். நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்படும். ஆனால் தூக்கு அல்லது ஆயுள் தண்டனை அளிக்க வரைவு மசோதா அனுமதிக்கவில்லை.

English summary
The government could introduce the new version of the Juvenile Justice Act in the ongoing Parliament session as it is seeking to fast-track the legislation that will clear the way for minors above the age of 16 years accused of heinous crimes such as rape and murder to be tried as adults.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X