For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அர்ச்சனா ராமசுந்தரம் மீதான தடை நீடிப்பு.. உச்சநீதிமன்றம் உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரத்தை சிபிஐ கூடுதல் இயக்குநராக நியமித்தற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிக்கிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் 14ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் டி.ஜி.பி.யாக பதவி வகித்தவர், அர்ச்சனா ராமசுந்தரம். இவரை கடந்த பிப்ரவரி 7-ந் தேதி சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக மத்திய அரசு நியமித்தது. ஆனால் இவரை தமிழக அரசு விடுவிக்காத நிலையில், தமிழக அரசு பணியில் இருந்து தன்னைத்தானே விடுவித்துக்கொண்டு டெல்லி சென்று சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக அவர் பொறுப்பேற்றார்.

Centre justifies Archana joining CBI

இதனால் அர்ச்சனா ராமசுந்தரத்தை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் வினித் நாராயண் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அர்ச்சனா ராமசுந்தரம் நியமனத்தில் மத்திய அரசு தேவையான விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. இந்த பதவிக்கான அதிகாரியை நேரடியாக நியமிக்க மத்திய அரசுக்கு அதிகாரமும் இல்லை என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அர்ச்சனா ராமசுந்தரம் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக பதவி வகிக்க சுப்ரீம் கோர்ட்டு கடந்த மே மாதம் 9-ந் தேதி இடைக்கால தடை விதித்தது.

கடந்த ஜூலை 21-ந் தேதி நடந்த விசாரணையின்போது, தமிழக அரசின் பதில் மனுவின் மீதான பதில் மனுவை 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் மத்திய அரசு சார்பில் மத்திய உள்துறை அமைச்சகம், பணியாளர், பொதுமக்கள் குறை மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் சார்பிலும் சில நாட்களுக்கு முன்பு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசும் தன்னுடைய எதிர்பதில் மனுவை தாக்கல் செய்தது.

இந்த மனுக்களின் மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப், பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வந்தது.

மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், தமிழக அரசு 2013-ம் ஆண்டு அளித்த ஒப்புதலின் அடிப்படையில் அர்ச்சனா ராமசுந்தரம் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக பணியில் சேர அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்துக்கு தமிழக அரசு 3 மாதங்களாக எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த அமைதியை மத்திய அரசு ஒப்புதலாக கருதி அதன் அடிப்படையில் அவரை பணியில் சேர மத்திய அரசு உத்தரவிட்டது. இது முற்றிலும் பணிவிதிகளுக்கு உட்பட்டே செய்யப்பட்டது. இது சட்டபூர்வமானது'' என்று குறிப்பிட்டார்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்தே, 2013-ம் ஆண்டில் தமிழக அரசு மத்திய அரசின் பணிக்கு தகுதியானவர்கள் என்று மூன்று அதிகாரிகள் அடங்கிய பட்டியலைத்தான் அளித்தது. அதனை ஒப்புதல் என்று கருத முடியாது. தமிழக அரசு பணியில் இருந்து முறைப்படி விடுவித்தால்தான் அந்த அதிகாரி மத்திய அரசு பணியில் சேரமுடியும் என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், சி.பி.ஐ. உயர் அதிகாரிகளை நியமிக்க அமைக்கப்பட்டுள்ள குழு பஞ்சானந்தா என்ற அதிகாரியின் பெயரை பரிந்துரை செய்த நிலையில் பரிந்துரைக்கப்படாத அர்ச்சனா ராமசுந்தரத்தை எப்படி நியமித்தீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் சண்டையில் தேவையின்றி ஒரு அதிகாரி பாதிப்பு அடைகிறார். அவரை தமிழக அரசு ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்துள்ளது. அவர் இந்த நியமனத்தில் இருந்து வாபஸ் பெற விரும்பினாலும் மத்திய அரசு ஒருமுறை சஸ்பெண்ட் செய்யும். எனவே மத்திய அரசு தனது முடிவை விரைவில் அறிவிக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதற்கு, 4 வாரத்துக்குள் தங்கள் முடிவை தாக்கல் செய்வதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விசாரணை அக்டோபர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதுவரை அர்ச்சனாவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிக்கும்.

English summary
The Centre has justified the IPS officer from Tamil Nadu cadre Archana Ramasundaram joining the CBI as its Additional Director. In its affidavit in response to the application from Tamil Nadu opposing her appointment, the Centre pointed out that the deputation of Ms. Archana was informed to the State government in October 2013 and the State had put her on ‘deputation offer’ list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X