For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி அரசின் நெருக்கடி.. சத்தீஸ்கர் மாநில ஆளுநர் சேகர் தத் ராஜினாமா!

By Mathi
Google Oneindia Tamil News

ராய்ப்பூர்: மத்திய அரசின் நெருக்கடியால் சத்தீஸ்கர் மாநில ஆளுநர் சேகர் தத் இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார். தமது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

Chhattisgarh Governor quits, submits resignation papers to President

மத்தியில் மோடி அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து பல மாநிலங்கள் ஆளுநர்களை மாற்ற முடிவு செய்தது. இது தொடர்பாக உள்துறை செயலர் கோஸ்வாமி ஆளுநர்களிடமும் பேசினார்.

ஆனால் கர்நாடகா, கேரளா மற்றும் அஸ்ஸாம் மாநில ஆளுநர்களான பரத்வாஜ், ஷீலா தீட்சித் மற்றும் ஜே.பி. பட்நாயக் ஆகியோர் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டனர். இந்த நிலையில் உத்தரப்பிரதேச ஆளுநர் பி.எல். ஜோஷி மட்டும் ராஜினாமா செய்தார்.

அவரது ராஜினாமாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் இன்று சத்தீஸ்கர் மாநில ஆளுநர் சேகர் தத் ராஜினாமா செய்துள்ளார். அவர் தமது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

English summary
Chhattisgarh Governor Shekhar Dutt resigned on Thursday and has submitted his resignation letter to President Pranab Mukherjee. The move came as the Narendra Modi government was planning to remove all Governors appointed by the Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X