For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிபிஐ வசமிருக்கும் நிலக்கரி வழக்குகளை ஊழல் தடுப்பு ஆணையம் ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக சிபிஐ வசம் இருக்கும் அனைத்து வழக்குகளையும் ஊழல் தடுப்பு ஆணையம் (சி.வி.சி) ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் சிபிஐ அமைப்பின் தலைமை அதிகாரிகளுக்கும் விசாரணை அதிகாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாலேயே இப்படிப்பட்ட பதிவு செய்யப்பட்ட 20 வழக்குகள் கைவிடப்பட்டன.

Coalgate: Supreme Court seeks CVC’s assistance

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ வசம் இருக்கும் அனைத்து நிலக்கரி ஊழல் வழக்குகளையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இதனால் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வழக்கு விவரங்களை சிபிஐ ஒப்படைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

English summary
The Supreme Court on Friday sought assistance of CVC to examine all cases in coal blocks allocation scam in which there were divergent views between investigating officer and CBI's head office on filing charge sheets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X