For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுதந்திர தினத்தையொட்டி 1,250 கைதிகளுக்கான தண்டனை குறைப்பு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Delhi: Over 1,250 prisoners get remission of sentence for good conduct
டெல்லி: சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள திகார், ரோஹிணி சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 1,250 கைதிகளின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு தண்டனை குறைப்பு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் மத்திய அரசால் டெல்லி சிறைச்சாலைகளின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்ட அலோக் வர்மா, நாட்டின் 68-ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி திகார், ரோகிணி சிறைகளில் உள்ள சுமார் 1,250 கைதிகளின் நன்னடத்தையைக் கருத்தில்கொண்டு அவர்களது தண்டனைக் காலத்தை குறைத்து உத்தரவிட்டார்.

இதன்படி, குறைந்தபட்சம் 15 நாள் முதல் அதிகபட்சமாக 3 மாதங்கள் வரை சிறைக் கைதிகளின் தண்டனைக் காலத்திலிருந்து குறைக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு மேல் சிறையில் இருப்பவர்களின் நன்னடத்தையைக் கண்டறிந்து அவர்களுக்கு குறைந்தபட்சமாக 15 நாள் வரை தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களின் நன்னடத்தையைக் கண்டறிந்து அவர்களுக்கு 3 மாதங்கள் வரை தண்டனைக் காலம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சமீபத்தில்தான் அலோக் வர்மா பிறப்பித்ததாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறையில் உள்ள கைதிகளின் நடத்தையை அடிப்படையாகக் கொண்டு இந்த தண்டனை குறைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

English summary
Over 1,250 inmates lodged in Tihar and Rohini jails were granted remission of sentence on the occasion of 68th Independence Day. The convicts, whose sentences have been reduced, include those who have served less than a year to more than ten years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X