For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கிக் கணக்கில் போடப்படும் சிலிண்டர் மீதான மானியத்திற்கு வரி கட்ட வேண்டி இருக்கும்: நிபுணர்கள்

By Siva
Google Oneindia Tamil News

Direct LPG subsidy payouts may be taxed: Experts
கொல்கத்தா: எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கான மானியத் தொகைக்கு வருமான வரி கட்ட வேண்டியது வரும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கேஸ் சிலிண்டருக்கான மானியத்தை மத்திய அரசு பயனீட்டாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்திவிடுகிறது. இந்த பணத்திற்கு வருமான வரி கட்ட வேண்டி இருக்குமா என்று நிபுணர்கள் கூறுவதை பார்ப்போம்.

இந்த ஆண்டு முதல் தனி நபர்களின் வங்கி கணக்கில் மானியத் தொகை சேரும். இந்த வருமானத்திற்கு வரி பிடிக்க வேண்டுமா இல்லையா என்பது பற்றி இதுவரை எந்த சுற்றறிக்கையும் வரவில்லை என்று மூத்த வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கேபிஎம்ஜியில் வரித்துறையை கவனிக்கும் நபின் பல்லோடியா கூறுகையில்,

வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் மானியத் தொகை குறைவானதாக இருந்தாலும் அது வருமானமாக கருதப்பட்டு அதற்கு வரி பிடிக்கப்பட வேண்டும் என்றார்.

ஆண்டுக்கு 9 மானிய சிலிண்டர் வாங்க தகுதி உடையவர்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ. 5,670 மானியமாக செலுத்தப்படும். இந்த பணத்திற்கு அதிகபட்சமாக 30 சதவீதம் வரி செலுத்துவோர் பிரிவில் உள்ளவர்கள் ரூ.1,700 வரியாக செலுத்த வேண்டி இருக்கும்(வரி போட்டால்).

English summary
According to experts, the money that the government transfers directly to consumers' bank accounts as LPG subsidy may well be considered as an income and taxed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X