For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது எங்க பாலம்.. ஏறி வராதே... கட்சிகளுக்குத் தடை போட்ட மக்கள்

|

பாட்னா: இது நாங்கள் எங்களுக்காக கட்டிய பாலம். இதைத் தாண்டி வரக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு பீகார் கிராம மக்கள் அதிரடித் தடை போட்டுள்ளனர்.

பாலம் கேட்டு கேட்டு நடையாய் நடந்து அலைந்து திரிந்தும் அரசுத் தரப்பில் பாலம் கட்டித் தராததால் மக்களே கட்டிக் கொண்ட மரப் பாலம் இது.

இந்தப் பாலத்தைப் பயன்படுத்தி வந்து யாரும் ஓட்டு கேட்கக் கூடாது என்று மக்கள் கட்டளையிட்டு அரசியல்வாதிகளை வாயடைக்கச் செய்துள்ளனர்.

Don't cross our bridge, Bihar villagers tell politicians

தர்பங்கா தடை

தர்பாக எம்.பி. தொகுதியில்தான் இந்த மக்கள் உத்தரவு களை கட்டியுள்ளது.

கமலாபூர் - பிரம்மோதர் காட் இடையே

இந்த மூங்கில் மரப் பாலம், கமலாபூர் மற்றும் பிரம்மோதர் காட் இடையிலான தாகும். இது பிர்ரி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதி.

தேர்தலே வேண்டாம்

இந்தக் கிராமத்து மக்கள் தேர்தலைப் புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

கம்லா ஆற்றின் குறுக்கே

கம்லா ஆற்றின் குறுக்கே உறுதியான கான்க்ரீட் கட்டித் தரக் கோரி இவர்கள் பல காலமாக போராட வந்தனர். ஆனால் இதுவரை யாரும அதை கண்டு கொள்ளவில்லை.

மக்களை போட்ட மரப் பாலம்

இதனால் அதிருப்தி அடைந்த மக்கள் தாங்களே மூங்கில் பாலத்தைப் போட்டுள்ளனர்.

3 லட்சம் செலவில்

மக்களே வசூலித்த ரூ. 3 லட்சம் பணத்தைக் கொண்டு இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

வராதா போய்ரு

இப்போது தேர்தல் பிரசாரத்திற்காக அரசியல் கட்சியினர் வரத் தொடங்கியுள்ளனர். ஆனால் பாலத்தில் கால் வைத்தால் நடப்பதே வேறு என்று கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அரசியல் தலைவர்களால் இந்தப் பாலத்தைக் கடந்து கிராமத்துக்குள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 30ம் தேதி

தர்பங்கா தொகுதிக்கு ஏப்ரல் 30ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

English summary
Residents of a village in Bihar’s Darbhanga parliamentary constituency have barred elected representatives from using a bamboo bridge they have built through their own donations. Villagers of Kamalpur-Brahmotar Ghat, a village under the Pirri panchayat of Bahadurpur block in Darbhanga, have announced boycott of Lok Sabha polls for failure of people’s representatives to fulfill their old demand for a concrete bridge over the Kamla river.
 “We have built a bamboo bridge, locally known as Chachri pul, over Kamla river last November by collecting donation of Rs.3 lakh from among the villagers and banned entry of people’s representative to express protest for their failures to fulfill a promise,” said Ashish Jha, a villager.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X