For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று இரவு 'ரத்த சிவப்பு' நிலாவை அமெரிக்காவில் பார்க்கலாம்: இந்தியாவில் தெரியாதாம்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: ரத்த சிவப்பு நிறத்தில் நிலாவை பார்த்தது உண்டா? இல்லை என்றால் இன்று இரவு தூங்காமல் இருந்தால் அந்த அதிசயத்தை பார்க்கலாம். ஆனால் இந்த ரத்த சிவப்பு நிலாவை இந்தியாவில் பார்க்க முடியாது.

எத்தனையோ சந்திர கிரகணம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்று இரவு ஏற்படும் சந்திர கிரகணத்தை பார்க்க தவறாதீர்கள். காரணம் இன்று இரவு முழு சந்திர கிரகணம். அது ஏற்படும்போது நிலா சிவப்பு நிறத்தில் மாறும்.

Don't miss the rare 'Blood Moon' Lunar Eclipse tonight

இன்று இரவு 1.58 மணிக்கு நிலாவின் நிறம் மாறத் துவங்கும். நிறம் மெல்ல மெல்ல மாறி 3.07 மணிக்கு நிலா சிவப்பு நிலாவாக காட்சியளிக்கும். இந்த காட்சி அதிகாலை 4.24 மணி வரை நீடிக்கும்.

நிலா ரத்த சிவப்பு நிறமாக இரவு 3.45 மணிக்கு மிக அருமையாகத் தெரியுமாம். இந்த சந்திர கிரகணம் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஹவாய் தீவுகளில் நன்கு தெரியும்.

அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் மேகமூட்டம் சிவப்பு நிலாவை மறைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் டாலாஸ், டென்வர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகர்களில் சிவப்பு நிலா நன்கு தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 15, அக்டோபர் 8 மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 4 மற்றும் செப்டம்பர் 28 ஆகிய தேதிகளில் நிலா சிவப்பு நிலாவாக மாறும்.

English summary
Full lunar eclipse is happening tonight as a result moon will look in burnt reddish orange colour. Thi blood moon will be visible in north and south America and Newzealand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X