For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செலவு கணக்குக் காட்டாத 10 கட்சிகள்... வரிச்சலுகையை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் சிபாரிசு

|

டெல்லி: கடந்த தேர்தலுக்கான செலவு கணக்குகளை காட்டாத 10 அரசியல் கட்சிகளின் வரிச்சலுகையை ரத்து செய்யுமாறு, வருமான வரித்துறைக்கு தேர்தல் கமிஷன் சிபாரிசு செய்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் செலவுக்கணக்குகளை சரியாக சமர்ப்பிக்காத கட்சிகளுக்கு வரிச்சலுகைகள் வழங்கக் கூடாது என வருமான வரித் துறையை தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டது.

EC seeks cancellation of tax benefits to 10 political parties

பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் செலவு விவரங்களை உரிய நேரத்தில் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவில்லை எனவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், அதிரடியாக பத்துக் கட்சிகளின் வரிச்சலுகையை ரத்து செய்ய தேர்தல் கமிஷன் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதியோடு, கட்சிகள் செலவு கணக்கை காட்ட வேண்டிய கெடு முடிந்துவிட்டது. காங். பா.ஜ., ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் கணக்கை சமர்ப்பித்துள்ள நிலையில், 10 கட்சிகள் இதுவரை செலவு கணக்கை காட்டவில்லை. இதனால், அவற்றின் வரிச்சலுகையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது,' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
The Election Commission (EC) has sought withdrawal of tax exemption benefits to ten political parties from the CBDT on the grounds that they failed to submit their mandatory expenditure contribution reports on time to the poll body.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X