For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீச்சல் உடையில் கோவா அமைச்சர் போட்டோ! பேஸ்புக்கில் போட்ட 'என்.ஆர்.ஐ' மீது எப்.ஐ.ஆர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

FIR over uploading Goa minister's photo in swimsuit
பானாஜி: கோவா பொதுப்பணித்துறை அமைச்சரை கேலி செய்து பேஸ்புக்கில் ஆபாசமாக படம் வெளியிட்ட அமெரிக்க வாழ் இந்தியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சின்ன ஸ்கர்ட் அணிந்து கொண்டு பப்புகளுக்கு செல்லும் பெண்களை கொண்டது இந்திய கலாசாரம் கிடையாது என்று கோவா பொதுப்பணித்துறை அமைச்சர் சுதின் தவாலிகர் சில தினங்கள் முன்பு, தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த, அம்மாநில காங்கிரஸ் கட்சி, அமைச்சருக்கு மினி ஸ்கர்ட் அனுப்பி வைக்கும் போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்தது.

இந்நிலையில், அமைச்சருக்கு இளஞ்சிவப்பு வண்ண நீச்சல் உடை அணிவித்து புகைப்படங்களை போலியாக உருவாக்கி, பேஸ்புக்கில் யாரோ நடமாட விட்டனர்.

மக்கள் பிரதிநிதியான அமைச்சருக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த சமூக வலைத்தள தாக்குதலால் கோவா அரசு அதிர்ச்சியடைந்தது. இதையடுத்து பேஸ்புக்கில் போலி படங்களை பிரசுரித்தவர்கள், பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு அரசு உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து 'முதல் தகவல் அறிக்கை' பதிவு செய்த காவல்துறை, இவ்வழக்கை சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைத்தது.

சைபர் கிரைம் போலீசார் விசாரித்ததில் கோவாவை சேர்ந்த அமெரிக்க வாழ் பிரஜையான சாவியோ அல்மெய்டா என்பவர்தான் இதுபோல படங்களை பதிவேற்றம் செய்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66 (பி) மற்றும் 67 ஆகியவற்றின்கீழ், சாவியோ அல்மெய்டாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

English summary
A US-based NRI has been booked for allegedly posting a morphed picture of Goa’s PWD Minister Sudin Dhavalikar in a bikini on social networking site Facebook.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X