For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலி முத்திப்போச்சு... கல்யாணம் கட்டிக்க ஓடிப்போன லெஸ்பியன் சிறுமிகள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

ராய்ப்பூர்: திருமணம் செய்வதற்காக லெஸ்பியன் சிறுமிகள் இருவர் வீட்டைவிட்டு ஓடிப்போன சம்பவம் சட்டீஸ்கர் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது மற்றும் 17 வயது சிறுமிகள் சிறுவயது முதலே தோழிகளாம். இரு வாரங்களுக்கு முன்பு, வீட்டை விட்டு வெளியே சென்ற 15 வயது சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை.

அவளது பெற்றோர் காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்துள்ளனர். காவல்துறை விசாரிக்க தொடங்கியபோதுதான், காணாமல்போனதாக கூறப்படும் சிறுமியின், சிறுவயது தோழியும் மாயமானது தெரியவந்தது.

ஒருவழியாக காணாமல்போன இருவரையும் அருகேயுள்ள சிறு நகரத்தில் போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

போலீசில் அளித்த வாக்குமூலத்தில் சிறுமிகள் கூறியுள்ளதாவது:

நாங்கள் இருவரும் குழந்தையாக இருந்தபோது முதல் தோழிகள். பெரியவர்களானதும் எங்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது. ஒருவரை விட்டு மற்றொருவரால் பிரிந்து இருக்க முடியாத மனநிலைக்கு வந்தோம். இருவரும் திருமணம் செய்து கொண்டால்தான் வாழ்க்கை முழுவதும் இணைந்து இருக்க முடியும் என்றும் முடிவு செய்தோம்.

இந்த சூழ்நிலையில் நாங்கள் இருவரும் நெருக்கமாக இருப்பது எங்களது பெற்றோர்களுக்கு தெரியவந்தது. அவர்களால் நாங்கள் அருவருப்பாக பார்க்கப்பட்டோம். சித்ரவதைகளுக்கு உள்ளானோம். எங்களை சந்திக்கவிடாமல் பெற்றோர்கள் தடுத்தனர். எனவேதான் ஓடிப்போய் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். இவ்வாறு சிறுமிகள் தங்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

வழக்கை பரிசீலித்த போலீசார் இருவருக்குமே சட்டப்படியான திருமண வயது வரவில்லை என்பதை கருத்தில் கொண்டு அவர்களை மீண்டும் பெற்றோரிடமே ஒப்படைக்க தீர்மானித்தனர். ஆனால் மீண்டும் வீட்டைவிட்டு இருவரும் ஓடிவிடக்கூடாது என்பதற்காக மன நல மருத்துவர்களை கொண்டு கவுன்சலிங் அளிக்கப்பட்டு வருகிறது.

English summary
Two minor girls, hailing from Raipur district, eloped with each other after their parents objected to their close relationship. The girls are in police custody and are being counselled so that they do not take any such step in the future, they said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X