For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5 ஆண்டுகளில் 597 பாதுகாப்பு படை வீரர்கள் தற்கொலை- மத்திய அரசு தகவல்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் பாதுகாப்பு படை வீரர்களில் 597 பேர் கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டனர் என்று ராஜ்யசபாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

ராஜ்யசபாவில் அருண் ஜேட்லி பேசியதாவது:

597 பேர் தற்கொலை

597 பேர் தற்கொலை

கடந்த 2009 முதல் 2013ம் ஆண்டு வரையில் முப்படையிலும் 597 வீரர்கள் (498 ராணுவ வீரர்கள், 83 விமானபடை வீரர்கள், 16 கடற்படை வீரர்கள்) தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

2010-ல்தான் அதிகம் பேர் தற்கொலை

2010-ல்தான் அதிகம் பேர் தற்கொலை

2010ம் ஆண்டில் மட்டும் அதிகப்படியாக 116 வீரர்கள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். கடந்த 2013ம் ஆண்டியில் இந்த நிலை சற்று குறைந்துள்ளது. 83 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

விலகிய ராணுவத்தினர்..

விலகிய ராணுவத்தினர்..

இந்த காலகட்டத்தில் முப்படையை சேர்ந்த அதிகாரிகள் 1,349 பேர் தங்களது ராணுவத்தில் இருந்து விலகியுள்ளனர். அவர்கள் முன்கூட்டிய ஓய்வு பெற்றுள்ளனர்.

ஓய்வு பெற விரும்பியோர்

ஓய்வு பெற விரும்பியோர்

2,215 வீரர்கள் முன்கூட்டிய ஓய்வுக்கு கோரிக்கை விடுத்தனர். 1,349 பேருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களுக்கு பொருத்தமான சூழலை உருவாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் மூலம் ராணுவ வீரர்கள் மனஅழுத்தமும் இல்லாமல் தங்கள் கடமைகளை செய்ய முடியும்.

19 விமானங்கள் சேதம்

19 விமானங்கள் சேதம்

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்திய விமானப்படைக்கு சொந்தமான 19 விமானங்கள் சேதம் அடைந்துவிட்டன.

இவ்வாறு பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

English summary
The armed forces lost 597 personnel to suicide in the last five years while 1,349 officers quit the Army during the same period, Rajya Sabha was informed on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X