For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்திலும் காங்கிரஸிடம் 2 தொகுதிகளை பறிகொடுத்தது பாஜக!

By Mathi
Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 2 சட்டசபை தொகுதிகளை காங்கிரசிடம் பாரதிய ஜனதா கட்சி பறிகொடுத்திருக்கிறது.

நாடு முழுவதும் 33 சட்டசபை, 3 லோக்சபா தொகுதிகளுக்கு செப்டம்பர் 13ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

Gujarat bypolls: BJP wins four assembly seats; Congress two

இதில் குஜராத்தில் மணிநகர், டீசா, தங்கரா, கம்பாலியா, மங்ரோல், தலஜா, ஆனந்த், மத்தார், லிம்கேடா ஆகிய 9 சட்டசபை தொகுதிகளும் வதோதரா லோக்சபா தொகுதியும் அடங்கும்.

மணிநகர் சட்டசபை தொகுதி மற்றும் வதோதரா லோக்சபா தொகுதி பிரதமர் மோடி ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தலை எதிர்கொண்டது. மணிநகர் தொகுதியில் தமிழர்கள் பெருமளவில் வசிக்கின்றனர்.

இடைத்தேர்தலை எதிர்கொண்ட 9 தொகுதிகளுமே பாரதிய ஜனதா வசம் இருந்தவை. தற்போது இதில் 7 ல்தான் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. தங்கள் வசம் இருந்த 2 தொகுதிகளை காங்கிரஸிடம் பாஜக பறிகொடுத்துள்ளது.

இது குஜராத்திலும் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

English summary
Ruling BJP on Tuesday won four seats while the Congress bagged two out of the nine Assembly seats in Gujarat, where bypolls were held on September 13.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X