For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல்வரை பதவியிலிருந்து இறக்க வலியுறுத்தி... ஹரியானா மின்துறை அமைச்சர் 'மிரட்டல்’ ராஜினாமா

Google Oneindia Tamil News

Haryana power minister Ajay Yadav resigns
சண்டிகர்: ஹரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவை எதிர்த்து அம்மாநில மின்துறை அமைச்சர் அஜய் யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தின் மின்துறை அமைச்சராக இருந்தவர் அஜய் யாதவ். இவர் நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து அம்மாநில முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தனது ராஜினாமா முடிவு குறித்து செய்தியாளர்கள் மத்தியில் அஜய் கூறுகையில்,‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வியில் இருந்து முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா எந்தவித பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. முதலமைச்சர் பதவியில் இருந்து ஹூடா நீக்கப்படாவிட்டால் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக கட்சி மேலிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மோசமாகிவிடும் என்று எச்சரித்த அஜய், இதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் பீரேதந்திர சிங்கும், அஜய் யாதவ் எடுத்த முடிவு சரியானதே என கருத்து தெரிவித்துள்ளார்.

தன்னைப் போலவே மற்ற அமைச்சர்களும் பதவி விலகும் முடிவிலேயே இருப்பதாக திடுக்கிடும் தகவலைக் கூறியுள்ளார் அஜய். இதனால் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடாவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

English summary
Haryana Power Minister Ajay Yadav resigned from the Bhupinder Singh Hooda-led Congress ministry alleging "bias" in several matters including recruitment and induction of members to various commissions and statutory bodies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X