For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் – அந்த மனைவியே "பாஸ்" ஆனால்??

Google Oneindia Tamil News

மும்பை: என்னதான் நடிப்பாக இருந்தாலும் கணவன், மனைவிக்கு இடையே இழையோடும் அழகான உறவுப் பாலத்தைதான் வெளிக்காட்டியுள்ளது ஒரு பிரபலமான தொலைபேசி இணைப்பு நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று.

அழகான ஒளிப்பதிவு, இயல்பான உணர்ச்சிகள் என்று அனைவரையும் திரும்ப பார்க்க வைத்துள்ள விளம்பரம் இது.

மேலோட்டமான விமர்சனங்களையும், கருத்து வேறுபாடுகளையும் கடந்தும் அனைவர் மனதிலும் பதிந்துள்ளது அழுத்தமாக.

உறவா? இயல்பா?:

உறவா? இயல்பா?:

முழுமையான உறவு பற்றியதா அல்லது பாலின வேறுபாட்டைக் காட்டுவதா....அல்லது என்னதான் பெண்கள் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தாலும் அவர்களின் அளவு இவ்வளவுதான் என்று கூறும் ஆணாதிக்க பார்வையா...

குவியும் எண்ணங்கள்:

குவியும் எண்ணங்கள்:

இதுதான் இந்த விளம்பரத்தைப் பார்ப்போருக்குத் தோன்றும் எண்ணங்கள். இந்த விளம்பரம் இப்படி பல விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

ரசனையான விளம்பரம்:

ரசனையான விளம்பரம்:

இப்படி இவ்விளம்பரமானது பல்வேறு தரப்புகளில் விவாதங்களை தோற்றுவித்திருந்தாலும் அனைவரையும் ரசனைக்கு உள்ளாக்கியுள்ளது.உங்களுக்காக அந்த விளம்பரம் படித்து ரசிக்கவும்.

மேலதிகாரியின் கட்டளை:

மேலதிகாரியின் கட்டளை:

ஒரு அழகான, திறமையான பெண் மேலதிகாரி. தனக்கு கீழ் வேலை பார்க்கும் அதிகாரி ஒருவரை ஒரு வேலையை அன்றே முடிக்கும்படி உத்தரவிடுகின்றார். மேலும், "முடிக்க இயலவில்லை" என்றெல்லாம் கூறக்கூடாது என்றும் கூறிவிடுகின்றார்.

வேலையின் பிடியில்:

வேலையின் பிடியில்:

அவ்வதிகாரி வேலையில் மூழ்கி இருக்கும் நேரத்தில் வேலை நேரம் முடிந்து மேலதிகாரி கிளம்பி விடுகின்றார்.

மனைவியின் அழைப்பு:

மனைவியின் அழைப்பு:

அந்நிலையில் தனியாக அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் அந்த அதிகாரிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகின்றது. அதில் அவருடைய மனைவி. வேலையை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் வீட்டுக்கு வாருங்கள் என்று கூறிகின்றார்.

நிறைய வேலை இருக்கும்மா:

நிறைய வேலை இருக்கும்மா:

அதற்கு அந்த அதிகாரியோ "பாஸ் நிறைய வேலை கொடுத்துருக்காங்க" என்று அழைப்பை கட் செய்கின்றார்.

கண்முன் விரியும் உணவுகள்:

கண்முன் விரியும் உணவுகள்:

உடனே மனைவியிடம் இருந்து ஸ்கைப் மூலமாக அழைப்பு வருகின்றது. அதில் தான் கணவருக்காக ஆசையாக செய்து வைத்திருக்கும் இரவு உணவுகள் கணவரின் கண் முன் காட்டப்படுகின்றது.

பாஸ் கிட்ட நீயே சொல்லிடு:

பாஸ் கிட்ட நீயே சொல்லிடு:

உங்க பாஸ் கிட்ட சொல்லிட்டு வீட்டுக்கு வாங்க என்கிறார். கணவர் அன்புடனும், மகிழ்ச்சியுடனும் பாஸிடம் நீயே சொல்லேன் என்பதுடன் முடிவடைகின்றது விளம்பரம்.

பாஸ்தான் பொண்டாட்டி:

பாஸ்தான் பொண்டாட்டி:

இதில் என்னவென்றால் அந்த பாஸ்தான் மேற்படி அதிகாரியின் மனைவியும் கூட என்பது உங்களுக்கு தெரிந்த விஷயம்தான்.

பிற்போக்கு சமுதாயம்:

பிற்போக்கு சமுதாயம்:

சமூக வலைதளங்களில் சிலர் இந்த விளம்பரத்தை "பிற்போக்குத்தனமானது" என்கின்றார்கள். மேலும், சிலர் இந்த விளம்பரம் மனித வள மேம்பாட்டு துறைக்கு எதிரானது. எங்குமே கணவன் - மனைவி ஒரே அலுவலகத்தில் இப்படிப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட கூடாது என்றுக் கூறுகின்றனர்.

அட வெறும் விளம்பரம்பா:

அட வெறும் விளம்பரம்பா:

இன்னும் சிலரோ, "இது வெறும் விளம்பரம்பா" என்கின்றனர். யார் என்ன சொன்னாலும் பலரின் பார்வையை இந்த விளம்பரம் தன்பக்கமாக திருப்பியுள்ளது என்பது அசாத்தியமான உண்மைதான்.

எனக்கு ஒரு டவுட்டு:

எனக்கு ஒரு டவுட்டு:

ஆனால், அந்த கணவர் தன்னுடைய வேலையை அன்றே முடித்தாரா, இல்லையா என்பதுதான் இன்னும் சந்தேகமாகவே உள்ளது. என்னவோ போங்கப்பா நல்லா இருந்தா சரிதான்!

English summary
s it about a perfect relationship or about gender power play? Or does it stereotype the woman, even one who is a super-achiever? The jury is still out as a debate rages over a new ad by a leading telecom company that attempts to pitch its network as cupid in a modern family context.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X