For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொகுதிக்கு வராத நடிகை ஹேமமாலினிக்கு இறுதி ஊர்வலம் நடத்திய மதுரா மக்கள்

By Siva
Google Oneindia Tamil News

ஆக்ரா: தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தொகுதி பக்கம் ஒரேயொரு முறை மட்டும் வந்த நடிகை ஹேமமாலினியை காணவில்லை என்று மதுரா மக்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் நடிகை ஹேமமாலினி உத்தர பிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் பிரச்சாரத்தின்போதே அவர் காரில் இருந்து இறங்க மறுத்ததால் தொகுதி மக்கள் கடுப்பானார்கள்.

இந்நிலையில் அவர்கள் தற்போது ஹேமமாலினி மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

ஒரு முறை

ஒரு முறை

தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆன பிறகு ஹேமமாலினி மதுரா பக்கம் கடந்த ஜூன் மாதம் 2வது வாரத்தில் ஒரேயொரு முறை மட்டும் தான் சென்றுள்ளார்.

காணவில்லை

காணவில்லை

தொகுதி பக்கம் ஹேமமாலினி வராததால் கடுப்பான மதுரா மக்கள் ஹேமமாலினியை காணவில்லை என்று போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்கள்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

ஹேமமாலினியை நம்பி வாக்களித்து அவரை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தோம். ஆனால் அவரின் செயலால் மக்கள் நொந்து போயுள்ளனர் என்று ஸ்வாதி சர்மா என்ற ஆசிரியை தெரிவித்தார்.

எப்பொழுது வருவார்?

எப்பொழுது வருவார்?

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குகளை ஹேமமாலினி காப்பாற்றுவாரா, அவர் எப்பொழுது தொகுதி பக்கம் வருவார் என்று தெரியாமல் மதுரா மக்கள் குழம்புகின்றனர்.

இறுதி ஊர்வலம்

இறுதி ஊர்வலம்

தொகுதிக்கு வராத ஹேமமாலினியை கண்டித்து அவருக்கு இறுதி ஊர்வலம் நடத்தினார்கள் போராட்டக்காரர்கள்.

English summary
Mathura residents displayed posters saying that their consituency MP Hemamalini is missing. They did so as Hema avoids her constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X