For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெலுங்கானா மக்கள் தொகை கணக்கெடுப்பு கலாட்டாக்கள்... படத்தொகுப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஒருவழியாக தெலுங்கானாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நேற்று ஒரே நாளில் நடந்து முடிந்துவிட்டது. இந்த திடீர் கணக்கெடுப்பால் மாநிலமே அல்லோகலப்பட்டுவிட்டது. அரசு விடுமுறை காரணமாக, தலைநகர் ஹைதராபாத்தில் நமது காமிராவில் தென்பட்ட காட்சிகளின் கிளிக்குகள் இங்கே....

யாருக்குப்பா டீ ஆத்துற

யாருக்குப்பா டீ ஆத்துற

ஊரே ஸ்தம்பித்து போய் கிடந்தாலும், பஸ் நிலையத்தில் பஸ்சே இல்லாமல் இருந்தாலும், ஹைதராபாத் பஸ் நிலையத்தில் கடையை திறந்து வைத்து வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கும் இவர்களை பார்த்தால், 'யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்குப்பா டீ ஆத்துற' என்ற திரைப்பட வசனம்தான் ஞாபகத்துக்கு வருகிறது.

கவித.. கவித..

கவித.. கவித..

'வண்டியே ஓடலைன்னாலும் டிராபிக் ஜாம் ஆகிவிட்டதே.. அடடே!" அட, ஆமாங்க. ஹைதராபாத் ரோட்டில் டிராபிக் ஜாமை ஏற்படுத்திய புறாக்களை பார்த்ததும் கன நேரத்தில் நமது கற்பனையில் உதித்த கவிதை (!) அது.

கடமையே கண்ணாயிரம்

கடமையே கண்ணாயிரம்

ரோட்டுல ஈ, காக்கா, பசுமாடு, எருமை மாடு என ஒன்னத்தையும் காணோம். அப்படியும் ஹைதராபாத் போலீசார் அசரவில்லையே. எப்படி சிக்னலில் ரெட், கிரீன் லைட்டுகளை மாற்றி மாற்றி எறியவிட்டனர் என்று படத்தை பாருங்கள்.

எங்களுக்கே கேட்டா..?

எங்களுக்கே கேட்டா..?

அடடா.. கேட்ட போட்டு மூடிட்டாங்களப்பு. இனி வண்டிய தள்ளிட்டுதான் போனுமோ என்ற ஏக்கத்தில் பெட்ரோல் காலியாகிப்போன டூவீலர்களை நிறுத்தி வைத்துள்ள வாடிக்கையாளர்கள்.

சபாஷ் குடும்பம்

சபாஷ் குடும்பம்

இது என்ன ஒரு குடும்பமா அல்லது ஒரு கிராமமா என்று கேட்க தோன்றுகிறது கணக்கெடுப்பில் பெயர் சேர்த்த இந்த குடும்பத்தாரை பார்த்தால். அது சரி வெளியூரிலிருந்தும் பெயர் சேர்க்க வண்டி புடிச்சி வந்திருப்பாங்கள்ள.

English summary
Desert looking Hyderabad during population survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X