இந்தியா செய்திகள்
'டீல்'.... ஜனாதிபதி பதவி காங்கிரசுக்கு.. துணை ஜனாதிபதி பதவி பாஜகவுக்கு..!டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் தனது வேட்பாளரை வெற்றி பெற வைக்க பாஜக சொல்லும் நபரை துணை ஜனாதிபதியாக்க காங்கிரஸ் முன் வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த விஷயத்தில் இரு கட்சிகளுமே வெளியில் நாடகம் போட்டாலும், உள்ளுக்குள் அவர்களிடையே 'டீல்' ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன.வரும் ஜூலை மாதத்தில் ஜனாதிபதி தேர்தலும், ஆகஸ்ட் மாதத்தில் துணை ஜனாதிபதி தேர்தலும் நடக்கவுள்ளது.எல்லாமீனவர்கள் குடும்பத்திற்கு இத்தாலி கோடி கொடுத்தது செல்லாது: சுப்ரீம் கோர்ட்திருவனந்தபுரம்: கேரளாவில் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மீனவர்களின் குடும்பத்தாருடன் இத்தாலி அரசு செய்த ஒப்பந்தம் இந்திய சட்டப்படி செல்லாது என உச்ச நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தெரிவித்துள்ளது.கேரள மாநிலம் கொல்லம் அருகே கடலில் சுட்டுக் கொல்லப்பட்ட அஜிஸ் பிங்கோ, ஜெலஸ்டின் ஆகியோரது குடும்பத்தாருக்கு இத்தாலி அரசு கடந்த வாரம் தலா ரூ.1 கோடி நஷ்ட ஈடாக
துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் பிரகாஷ் சிங் பாதல் போட்டி?டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் பஞ்சாப் முதல்வரும் சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் போட்டியிடுவார் என்று தெரிகிறது.ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை ஆதரிக்கத் தயார் என்றும், அதே நேரத்தில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் யாரையும் ஆதரிக்க மாட்டோம்
அன்சாரி- பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க மாட்டோம்; கலாமை ஆதரிக்க தயார்- பாஜகடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாம் போட்டியிட விரும்பினால் அவரை ஆதரிக்கத் தயார் என்று பாஜக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் யாரையும் ஆதரிக்க மாட்டோம் என்றும் பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.அப்துல் கலாமை பாஜக அரசு தான் ஜனாதிபதியாக்கியது. ஆனால், அடுத்து ஆட்சிக்குசச்சின் நியமனத்தை நாடே வரவேற்குது, நீங்க வேற... ப.சிதம்பரம்டெல்லி: சச்சின் டெண்டுல்கரை ராஜ்யசபா நியமன உறுப்பினராக நியமித்ததை நாடே வரவேற்றுள்ளது. மேலும் அவரது நியமனத்தில் எந்தத் தவறும் இல்லை. முறையாகத்தான் எல்லாம் நடந்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சச்சினை ராஜ்யசபாவுக்கு நியமித்ததில் எந்தத் தவறும் இல்லை. இதை நாடே வரவேற்றுள்ளது. எனவே இதை எதிர்ப்பதற்கு எந்தக் காரணமும்
சச்சினை எம்.பியாக்கியது காங்கிரஸின் 'டர்ட்டி பிக்சர்ஸ்'- தாக்கரே தாக்குமும்பை: ஏற்கனவே அமிதாப் பச்சன், ஹேமமாலினி, ஜெயா பச்சன் ஆகியோரை ஏற்கனவே ராஜ்யசபா எம்.பியாக்கினர். அவர்கள் அங்கு போய் என்ன செய்து விட்டனர்.இப்போது ஒரு கிரிக்கெட் வீரரை ராஜ்யசபாவுக்குக் கூட்டிப் போயுள்ளனர். இதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் டர்ட்டி பிக்சர்ஸ். வேறென்ன சொல்வது என்று காட்டமாக கூறியுள்ளார் சிவசேனா தலைவர் பால் தாக்கரே.சச்சின் டெண்டுல்கரை ராஜ்யசபா எம்.பியாக்கியிருப்பது குறித்துஅசாமில் படகு கவிழ்ந்ததில் 103 பேர் பலி, 100 பேர் மாயம்: மீட்பு பணி தீவிரம்துப்ரி: அசாம் மாநிலத்தில் படகு கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் உள்பட 103 பேர் பலியாகினர். சுமார் 100 பேரைக் காணவில்லை.அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் தனியார் படகு ஒன்று 300 பயணிகளுடன் பிரம்மபுத்ரா ஆற்றில் நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீர் என்று வீசிய சுறாவளி காற்றில் சிக்கி படகு கவிழ்ந்தது.
கருப்பு பணம்: இந்தியர்களின் வங்கிக் கணக்குகளை தர சுவிஸ் சம்மதம்டெல்லி: சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் ரகசிய கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் குறித்த சில விவரங்களை இந்திய அரசிடம் கொடுக்க அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளது. வெளிநாடுகளில் அதிலும் குறிப்பாக சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் தங்களின் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். அதை இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டிடம் அந்நாட்டுபாகிஸ்தான் அல்குவைதா அமைப்புக்கு புதிய தலைவராக பர்மான் நியமனம்!டெல்லி: பாகிஸ்தானில் செயல்படும் அல் குவைதாவின் புதிய தலைவராக பர்மான் சின்வாரி அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட அல்குவைதாவின் மூத்த தலைவரான பதார் மன்சூரின் மிகவும் நம்பிக்கைக்குரியவர் பர்மான் சின்வாரி என்று கூறப்படுகிறது. பர்மானின் நியமனம் தொடர்பாக வெளிநாடுகளில் செயல்படும் அல்குவைதா இயக்கத்தினரிடமும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. 3 ஆண்டுகளுக்கு முன்புதான் இவருக்கு திருமணம்
அரசு சொல்லித் தான் வெளிநாடுகளுக்கு செல்கிறேன்: பிரதீபா பாட்டீல்டெல்லி: அரசு சொல்லித் தான் பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தெரிவித்துள்ளார்.குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 25ம் தேதியுடன் முடிகிறது. அவர் தனது பதவிக்காலத்தில் அதிகபட்சமாக 22 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது வெளிநாட்டுப் பயணங்களால் சர்ச்சை எழுந்துள்ளது.இந்நிலையில் அவர் இது குறித்துஉலக அமைதிக்காக காளை மாட்டுக்கு திருமணம் செய்து வைத்த காங். எம்.எல்.ஏ.திருப்பதி: உலக அமைதிக்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாகேஸ்வர ராவ் காளை மாட்டுக்கும், பசுவுக்கும் திருப்பதியில் திருமணம் செய்து வைத்தார்.மேற்கு கோதாவரி மாவட்டம் தனுக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கருமுரி வெங்கட நாகேஸ்வர ராவ். அவர் தனது ஆதரவாளர்கள் 70 பேருடன் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோசம்ரக்ஷனசாலா என்னும் மாட்டுப் பண்ணைக்கு சென்றார். அங்கு அய்யர் தொடர் விடுமுறைகள்- திருப்பதியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்திருப்பதி: தொடர் விடுமுறைகளால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.இதனால் சாமி தரிசனம் செய்ய 28 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.சனி, ஞாயிறு விடுமுறைகளைத் தொடர்ந்து மேதின விடுமுறையும் வருவதால் திருப்பதி கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. வெள்ளிக்கிழமை முதல் கூட்டம் கட்டுக்கடாங்கமல் குவிந்து கொண்டே இருக்கிறது. திருப்பதியில் அனைத்து விடுதிகளிலும் அறைகள் நிரம்பிவிட்டன.இலவச வரிசையில் மாவோயிஸ்டு பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையில் சத்தீஸ்கர் அமைச்சர்கள் குழுவும் பங்கேற்புராய்ப்பூர்: கடத்தப்பட்ட ஆட்சியர் அலெக்ஸ்பால் மேனனை மீட்பது தொடர்பாக மாவோயிஸ்டுகள் பிரதிநிதிகளுக்கும் சத்தீஸ்கர் அரசு குழுவுக்கும் இடையே இன்று நடைபெற்ற 4-ம் கட்ட பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட ஆட்சியரான தமிழ்நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ்பால் மேனன் கடந்த 21-ந் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். சுக்மா மாவட்டத்தை உள்ளடக்கிய பஸ்தார் மக்களவையில் தொடரும் தெலுங்கானா முழக்கம்டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் தெலுங்கானா தனிமாநிலம் கோரி அப்பிரதேச எம்.பி.க்கள் தொடர் முழக்கங்களை எழுப்பியதால் அவை நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளாகின.இன்று காலை மக்களவை கூடியதும் தெலுங்கானா தனிமாநிலம் கோரி அப்பகுதி எம்.பிக்கள் தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். தெலுங்கானா கோரும் பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். சபாநாயகர் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தபோதும் முழக்கங்கள் ஓயவில்லை.அப்போது பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ் எழுந்து,
'மண்ணைக் கவ்விய' உத்தரப் பிரதேசத்தில் ராகுல் முகாம்லக்னோ: உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வியைக் கொடுத்த உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராகுல்காந்தி முகாமிட்டுள்ளார்.உத்தரப்பிரதேச பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் முறையாக ராகுல்காந்து இன்று அம்மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டார். அவரது சொந்தத் தொகுதியான அமேதியிலும் கூட காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்திருந்தது. இருந்தாலும்கூட தமது தொகுதி மக்களின் குறை கேட்பதற்காக ராகுல் பயணம் மேற்கொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.ராகுலின்
