For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.எஸ்.க்கு எதிரான போரில் இந்தியா இணையும்- ஒபாமாவிடம் மோடி ஒப்புதல் தெரிவித்தாக சொல்கிறார் சு.சுவாமி!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஈராக், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போரில் இந்தியாவும் இணைய அந்நாட்டு அதிபர் ஒபாமாவிடம் பிரதமர் மோடி ஒப்புதல் தெரிவித்திருப்பதாக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெற அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தலைமையிலான அரசு முயற்சி எடுத்து வருகிறது. இந்த நிலையில், ஐ.எஸ்,. தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பில் இணைவதாக அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் நரேந்திர மோடி ஒப்புக்கொண்டுள்ளார் என்று என்று சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Happy that Modi committed to Obama that India would join the anti-ISIS war. Now Indo-US good relations will reach new unprecedented heights.</p>— Subramanian Swamy (@Swamy39) <a href="https://twitter.com/Swamy39/status/516747287460978689">September 30, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ஐ.எஸ்.ஐ.எஸ் க்கு எதிரான போரில் இந்தியா இணையும் என்று ஒபாமாவிடம் மோடி ஒப்புதல் தெரிவித்துள்ளார். எனவே இந்தியா - அமெரிக்க உறவு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டும்.

இவ்வாறு சுவாமி கூறியுள்ளார்.

அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் ஒபாமா நேற்று இரவு விருந்து அளித்தார். இருந்த போதிலும், சுப்ரமணியன் சுவாமியின் கருத்தை வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் சையது அக்பரூதின் மறுத்துள்ளார்.

English summary
Prime Minister Narendra Modi has committed to US President Obama that India would join the United States of America-led international coalition against the Islamic State of Iraq and the Levant (ISIL) or the Islamic State (IS), claimed BJP leader Subramanian Swamy on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X