For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆகஸ்ட் 25... இஸ்லாமாபாத்தில் நடக்கிறது இந்தியா -பாக் இருதரப்பு பேச்சுவார்த்தை!

Google Oneindia Tamil News

டெல்லி: ஆகஸ்ட் 25ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு பேச்சுவார்த்தையில் இருநாட்டு வெளியுறவுத்துறை செயலாளர்களும் சந்தித்துப் பேச உள்ளனர்.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு இருதரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. ஆனால், கடந்தாண்டு ஜனவரி மாதம் காஷ்மீரில் எல்லைக்கோடு பகுதியில் இந்திய வீரர்கள் 2 பேர் பாகிஸ்தான் ராணுவத்தால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, இந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.

India, Pakistan foreign secretaries to meet on August 25

இந்நிலையில் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், மே 27-ந் தேதி பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 45 நிமிடம் நடந்த அந்த பேச்சுவார்த்தையில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில், இந்திய-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நேற்று, இந்திய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங்கும். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் அய்ஜாஸ் அகமது சவுத்ரியும் தொலைபேசி வாயிலாக பேசிக் கொண்டார்கள்.

அப்போது, அடுத்த மாதம் (ஆகஸ்டு) 25-ந் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவெடுக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது ஒரே நேரத்தில் டெல்லியிலிருந்தும், இஸ்லாமாபாத்திலிருந்தும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும், இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் நேற்று டெல்லியில் கூறியதாவது :-

English summary
After the decision to invite Nawaz Sharif for PM Narendra Modi's swearing in, his government on Wednesday pulled another rabbit out of its hat as it confirmed a meeting between the foreign secretaries of India and Pakistan next month. Foreign secretary Sujatha Singh will travel to Islamabad for a meeting with her counterpart Aizaz Ahmed Chaudhry on August 25 in a likely attempt to revive the dialogue process which has effectively remained stalled since the ceasefire violations in January 2013.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X