For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா-பிரேசில் இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

By Mathi
Google Oneindia Tamil News

ரியோடிஜெனிரோ: இந்தியா மற்றும் பிரேசில் இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரேசில் சென்றிருந்தார். அம்மாநாட்டில் இந்தியா தலைமையில் பிரிக்ஸ் நாடுகளுக்கு என தனி வங்கி உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக வங்கியை இனி பிரிக்ஸ் நாடுகள் நம்பி இருக்க தேவையில்லை என்ற நிலை உருவாகி உள்ளது.

India signs three deals with 'key global partner' Brazil

இதனைத் தொடர்ந்து நேற்று பிரேசிலியா நகரில் பிரேசில் அதிபர் தில்மா ரூசெப்புடன் இருநாட்டு உறவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது இரு நாடுகள் இடையே சுற்றுச்சூழல், விண்வெளி, தூதரக ஆலோசனைகள் தொடர்பாக 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் இந்தியாவின் முக்கிய வர்த்தக நட்பு நாடுகள் பட்டியலில் பிரேசிலும் இணைந்துள்ளது.

பின்னர் பிரேசிலியாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தூதரக கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

English summary
Prime Minister Narendra Modi Wednesday described Brazil as India's "key global partner" as the two countries inked three deals on cooperation in environment issues, consular and mobility issues, and for augmentation of a Brazilian earth station for receiving and processing data from Indian remote sensing satellites.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X