For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் இந்திய விண்வெளி வீரர்கள்- இஸ்ரோ திட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: செவ்வாய் கிரகத்திற்கு இந்திய விண்வெளி வீரர்களை அனுப்பும் அடுத்த கட்ட திட்டத்திற்கு இஸ்ரோ தயாராகி வருகிறது.

ஏற்கனவே செவ்வாய் கிரகத்திற்கு சென்று ஆய்வு செய்ய ஆளில்லா விண்கலத்தை அனுப்பி சாதனை செய்த இந்தியா, தற்போது அடுத்த முயற்சியாக விண்கலத்துடன் இந்திய விண்வெளி வீரர்களையும் அனுப்பி ஆய்வு செய்யதிட்டமிட்டுள்ளது.

isro

இதன் முதல் சோதனை ஓட்டம் ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி தளத்தில் இருந்து மே அல்லது ஜூன் மாதத்தில் துவங்க இருக்கிறது.

மிகுந்த தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இவ்விண்கலத்துடன் துணை சுற்றுப்பாதை விமானம் ஒன்றையும் இணைத்து அதில் வீரர்கள் பயணம் செய்யுமாறு அமைக்கப்பட்டுள்ளது என்கிறார் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக செயலாளர் ராதாகிருஷ்ணன்.

இந்த திட்டத்திற்கு மத்திய அரசாங்கத்தினால் ரூ.12,500 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.12,500கோடியில் இதுவரை ரூ145 கோடி அனுமதி கிடைத்திருக்கிறது.இந்திய விண்வெளிவீரர்களுக்கு காப்ஸ்யூல் பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாட்டிக் நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் ரஷ்யாவும், அமெரிக்காவும் இதனை சிறப்பாக செய்து முடித்துள்ளது. கடைசியாக சீனா 2003ல் வீரர்களுடன் கூடிய விண்கலத்தை செலுத்தியுள்ளது.இந்தியாவில் இத்திட்டம் வெற்றி அடைந்தால் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பிய பட்டியலில் நாமும் இடம் பிடித்து சாதனை புரிய இயலும்.

English summary
ISRO unveils space capsule with the Indian astronauts for Mars. For this plan, our Indian government allotted rs.145 crores. But, the total expenditure of this project is rs.12500 crores Indian money.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X