For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமானத்தில் பயணிக்கு தந்த உணவில் பல்லி... வதந்தி என்கிறது ஏர் இந்தியா

Google Oneindia Tamil News

டெல்லி: விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி கிடந்ததாக வெளியான தகவலை மறுத்துள்ளது ஏர் இந்தியா விமான நிறுவனம்.

டெல்லி இந்திரா காந்தி சர்வ தேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் 1 மணியளவில் லண்டன் புறப்பட்டது ஏர் இந்தியாவின் ஏஐ-111 விமானம் (போயிங் 787 டிரிம் லைனர்). விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது பயணிகளுக்கு உணவு வழங்கப் பட்டது.

'It's false and baseless': Air India reacts to reports of 'lizard in lunch'

அப்போது பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவுத் தட்டில் கருப்பு நிற பல்லி ஒன்று கிடந்ததாகவும், அதைக் கண்டு சம்பந்தப்பட்ட பயணி கூச்சலிட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. மேலும், இதனால் மற்ற பயணிகளும் தங்களது உணவை வாங்க மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இது தொடர்பாக உணவுத் தட்டில் பல்லி இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் சமூகவலைதளங்களில் வெளியானது.

இந்நிலையில், இத்தகவலை டெல்லி ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-

இப்படி ஒரு சம்பவம் ஒருபோதும் நடந்தது இல்லை. இது தொடர்பாக லண்டனிலோ, டெல்லியிலோ, விமானத்திலோ புகார் செய்யப்பட்டதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக விமானத்தின் பிற பயணிகளோ, விமான ஊழியர்களோ அறியவில்லை.

இது ஒரு வதந்தி என்பது தெளிவு. ‘டுவிட்டர்' சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு படத்தால்தான் இதெல்லாம் வந்திருக்கிறது. இதை வெளியிட்டது யார், அவர் கூறியது என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

இது வதந்தி என்று கண்டறியப்படுகிறபோது, அது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எங்கள் உணவு, இந்தியாவின் சிறந்த தாஜில் தயாரிக்கப்படுபவை. விமானத்தில் தலை சிறந்த, விருதுக்குரிய உணவை தாஜ் சட்ஸ் தயாரித்து வழங்குகிறது. எங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தத்தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Air India, denying reports that a lizard was found in a packed meal on board its Delhi-London flight, is now investigating the source of what the airline calls "mischievous propaganda to tarnish" its image.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X