For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தும் ‘காஷ்மீர் தீர்மானம்' தேவை இல்லாதது: வெங்கையா நாயுடு

By Mathi
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: பாகிஸ்தானுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையை மத்திய அரசு மீண்டும் தொடங்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுபற்றி ஹைதராபாத் வந்த மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.

J-K Council resolution on Indo-Pak talks uncalled for: Venkaiah Naidu

இதற்கு பதில் அளித்த வெங்கையா நாயுடு, இந்தியா-பாகிஸ்தான் விவகாரம் என்பது உள்ளூர் பிரச்சினையோ அல்லது மாநில பிரச்சினையோ அல்ல. இந்த விவகாரம் முற்றிலுமாக இந்திய அரசு சம்பந்தப்பட்டது.

இரு நாட்டு உறவுகள் தொடர்புடையது. மத்திய அரசு தான் இதில் இறுதி முடிவு எடுக்க முடியும். இது தொடர்பாக ஒரு மாநில அரசு தீர்மானம் இயற்றுவது தேவை இல்லாதது. தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.

இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்

English summary
Union Minister M Venkaiah Naidu termed as ‘uncalled for and not in the national interest’ a resolution passed today by the Jammu and Kashmir Legislative Council on resumption of talks with Pakistan saying only Centre will take a call on the issue of bilateral dialogue with Islamabad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X