For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோருகிறார் ஜெயலலிதா!

Google Oneindia Tamil News

பெங்களூர்: நான் அரசியல் கட்சியின் தலைவர். எனக்கு 1 கோடி தொண்டர்கள் உள்ளனர். 3 முறை முதல்வராக இருந்துள்ளேன். நான் தனி நபர் அல்ல. எனவே எனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும். ஜாமீன் அளித்தால் நான் தப்பி ஓட மாட்டேன். சாட்சிகளையும் நான் கலைக்க முயற்சிக்க மாட்டேன். இந்த வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் மறு விசாரணை செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது மனுவில் கோரியுள்ளார் ஜெயலலிதா

ஜெயலலிதா இன்று நான்கு மனுக்களத் தாக்கல் செய்துள்ளார். ஒரு னுமனுவில், சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா மிகவும் தவறான தீர்ப்பை வழங்கியுள்ளார். நெறி தவறிய அந்த தண்டனையை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Jaya's assurance in her bail plea

மற்றொரு மனுவில், சிறப்பு கோர்ட் அளித்த ரூ.100 கோடி அபராதம், 4 ஆண்டுகள் தண்டனை ஏற்புடையதல்ல. எனவே இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது மனு ஜாமீன் மனுவாகும். அதில், நான் அரசியல் கட்சியின் தலைவர். எனக்கு 66வயது ஆகிறது. சர்க்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு நோய் உள்ளதால் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெங்களூர் சிறைச்சாலையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதால் அச்சுறுத்தல் உள்ளது. மேலும் , 100 கோடி அபராதம் என்பது நிறைவேற்ற முடியாத நிபந்தனை. நான் ஒரு சாதாரண நபர் அல்ல. மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருக்கிறேன். தமிழ்நாட்டில் ஒரு கோடி அதிமுக தொண்டர்கள் உள்ளனர். அவர்களிடத்தில் எனக்கு நல்ல பெயர் இருக்கிறது. ஜாமீனில் சென்றால் எங்கும் தப்பி ஓடமாட்டேன். வெளியே சென்றால் சாட்சிகளை கலைக்க மாட்டேன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இன்னொரு மனுவில், தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை கர்நாடகா உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார் ஜெயலலிதா.

English summary
ADMK leader Jayalalitha has assured that she will flee the nation if she was granted bail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X