For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருத்த முடியாத தீர்ப்புக்களை தந்த நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Jayalalithaa's asset case Judge Michael D Cunha
பெங்களூர்: கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.

நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கு தீர்ப்பினை நெருங்கியதற்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவே மிக முக்கிய காரணம். வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கி நீதிபதியாக உயர்ந்தது வரை நேர்மையானவராகவே இருந்து வந்துள்ள நீதிபதி குன்ஹா அளித்துள்ள தீர்ப்புக்கள் சரியானதாகவே இருந்துள்ளதாம்.

6 நீதிமன்றங்கள்

1996-ம் ஆண்டு ஜூலையில் சென்னை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிய ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை சிங்கார வேலர் சிறப்பு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் என கடந்த 18 ஆண்டுகளில் 6 நீதிமன்றங்களின் படிகளை ஏறி இருக்கிறது.

90 நீதிபதிகள் விசாரணை

சென்னை நீதிமன்ற நீதிபதி சம்பந்தம் என்பவரில் ஆரம்பித்து நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா வரை ஏராளமான நீதிபதிகள் இவ்வழக்கை விசாரித்துனர். இவ்வழக்கில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஓராண்டுக்குள் தீர்ப்பெழுதும் கட்டத்திற்கு நகர்த்தியதில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவின் கடும் உழைப்பும், அசராத அணுகுமுறையுமே முக்கிய காரணம்.

வழக்கறிஞர் டூ நீதிபதி

மங்களுர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய நீதிபதி குன்ஹா 2002ல் நீதிபதி தேர்வு எழுதி பெல்காம் மாவட்ட நீதிபதியாக பதவியேற்றார்.

உமாபாரதிக்கு எதிராக

1994ஆம் ஆண்டு இஸ்லாமியர்கள் மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றியதனால் ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து உமாபாரதி மீது கலவரத்தை தூண்டுதல், கொலை முயற்சி வழக்கு போடப்பட்டது.

திருப்ப பெற முயற்சி

2002ஆம் ஆண்டு இந்த வழக்கினை திரும்ப பெற அப்போதய அரசு முயற்சி மேற்கொண்டது. இதற்கு மாவட்ட நீதிமன்றமும் அனுமதி வழங்கியது. ஆனால் 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி உமாபாரதி எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஹூப்ளி மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி.குன்ஹா, நோட்டீஸ் அனுப்பினார்.

சரணடைந்த உமாபாரதி

இதனையடுத்து ஹூப்ளி நீதிமன்றத்தில் உமாபாரதி சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் குன்ஹா.

லோக் ஆயுக்தா

லோக் ஆயுக்தா நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். அதன் பிறகு ஹார்வா மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின், பெங்களூரு குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். அங்கிருந்து பெங்களூரு புறநகர் கோர்ட் நீதிபதியாக மாற்றப்பட்டார்.

ஊழலுக்கு எதிரானவர்

ஊழலுக்கு எதிராக செயல்படுபவர் என்று பெயரெடுத்தவர். அதனால்தான் இவரை கர்நாடக அரசு விஜிலென்ஸ் துறையில் பதிவாளராக நியமித்தது. இந்த வழக்கை விசாரிக்க குன்ஹாதான் சரியான நபராக இருப்பார் என்று கர்நாடக அரசே இவரைப் பரிந்துரைத்தது.

14 வது நீதிபதி குன்ஹா

1997-ல் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகு ஜான் மைக்கேல் டி'குன்ஹா 14-வது சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக கடந்த 31-10-2013 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

11 மாதங்களில் தீர்ப்பு

பெங்களூர் சிபிஐ நீதிமன்றத்தின் நீதிபதியாகவும்,பெங்களூர் மாவட்ட நீதிமன்ற பதிவாளராகவும் பணியாற்றிய இவர் கடந்த 11 மாதங்களில் வழக்கை தீர்ப்பை நோக்கி நகர்த்தியுள்ளார்.அதற்கு காரணம் அவருடைய கடினமான உழைப்பும், கண்டிப்பான அணுகு முறையும்தான் காரணம்.

கண்டிப்பான நீதிபதி

மேலும் மனு மேல் மனு போட்டு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த தனியார் நிறுவனங்களின் மனுக்களை மிகச்சரியாக கையாண்டார். முதல் முறையாக அவர்களுக்கு அபராதம் விதித்தார். அரசு வழக்கறிஞருக்கும் அபராதம் விதித்த கண்டிப்பான நீதிபதி இவர்.

18 மணிநேர வேலை

டி'குன்ஹா சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க ஆரம்பித்ததும் வாரத்தின் 5 நாட்களும் விசாரணையை தொடர்ந்து நடத்தினார். இதற்காக தினமும் 18 மணி நேரம் ஒதுக்கி வேலை செய்தார். தீர்ப்புக்கு ஆயத்தம் அதுவும் தீர்ப்பு தேதியை குறித்த பிறகு, நீதிமன்றத்தை சுத்தம் செய்பவர்கள் வருவதற்கு முன்பாக தனது இருக்கையில் வந்து அமர்ந்து விடுவார். வழக்கு குறித்த அனைத்து ஆவணங்களையும் படித்து, அவ்வப்போது குறிப் பெடுத்துக்கொள்வார் என பெங்களூர் சிறப்பு நீதிமன்ற ஊழியர்கள் நீதிபதி டி'குன்ஹாவின் பாணி குறித்து விவரிக்கின்றனர்.

இரவு வரை பணி

காலை 8.18 மணிக்கு தனது இருக்கையில் அமர்ந்த நீதிபதி குன்ஹா மாலை 7.30 மணி வரை பணியில் மூழ்கினார்.இன்று வழங்கவிருக்கும் தீர்ப்பின் பக்கங்களுக்கு இறுதிவடிவம் கொடுத்துக் கொண்டிருந்தார். அதுவும் தீர்ப்பின் இறுதி வடிவத்தை தனது கைப்படவே கடந்த 4 தினங்களாக திருத்தி, தட்டச்சு செய்துள்ளார். திருத்த முடியாத தீர்ப்புக்கள் நீதிபதி டி'குன்ஹாவை பொறுத்தவரை அவர் ஒரு முறை தீர்ப்பு அளித்தால், அந்த வழக்கு அடுத்தடுத்து உயர்நீதி மன்றங் களை அணுகினாலும் தோல்வியே அடையும்.அந்த அளவுக்கு தீர்ப்பு வழங்குவதில் கெட்டிக்காரர் என கர்நாடக நீதித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

English summary
Seventeen years after the case was first filed, a Bangalore court will decide whether Tamil Nadu Chief Minister J Jayalalithaa accumulated assets disproportionate to her known sources of income. The verdict comes after much waiting. After the trial was completed, the presiding judge John Michael D’Cunha sought two weeks time to pronounce the verdict as there was too much material on record to come out with a verdict within the time stipulated by law.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X