For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கார்கில்: ஓங்கி உயர்ந்த மலைகளும், வளைவுகளும்.... பாகிஸ்தானுக்குக் கை கொடுத்த பேராயுதங்கள்

Google Oneindia Tamil News

- ரிச்சா பாஜ்பாய்

கார்கில்: காஷ்மீர் பகுதியில் காணப்படும் உயரமான மலைகளும், முகடுகளும்தான் கார்கில் போரின்போது பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்த முக்கிய அம்சங்களாகும்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள டிராஸ் பகுதியில் சுமார் 9 ஆயிரம் முதல் 14 ஆயிரம் அடி உயரத்தில் காணப்படும் மலைகள் உள்ளன.

ஆனாலும், இத்தகைய மலைச் சிகரங்களில் தான் நமது வீரர்கள் கேப்டன் மனோஜ் பாண்டே, விக்ரம் பத்ரா, அனுஜ் நாயர், விஜயந்த் தப்பார் மற்றும் இன்னும் பல இந்திய ராணுவ வீரர்கள் ஊடுருவல்காரர்களை விரட்டியடித்து சாகசம் புரிந்தனர்.

இரவு நேரங்களில்...

இரவு நேரங்களில்...

இத்தகைய மலைகளில் ஏறும் போது எதிரிகளின் பார்வையில் இருந்து தப்புவதற்காக இரவு நேரத்தைத் தான் இந்திய வீரர்கள் தேர்ந்தெடுப்பார்களாம். இரவு நேரங்களில் மலைகளில் ஏறும் வீரர்கள் காலையில் மறைந்திருந்து தாக்குதல் நடத்துவார்களாம்.

கேடயம்...

கேடயம்...

ஆனால் உண்மையில் இத்தகைய உயரமான மலைகளும், முகடுகளும் பாகிஸ்தான் வீரர்களுக்கு கேடயமாக அமைந்திருந்தது. ஏனெனில், அதன் மீதிருந்து பருந்து பார்வையில் இந்திய வீரர்களின் நடவடிக்கையை அவர்களால் சுலபமாக கண்காணிக்க முடிந்தது.

ஏவுகணைத் தாக்குதல்...

ஏவுகணைத் தாக்குதல்...

மேலும், வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதலும் நடத்துவது எளிதானது. அவர்களிடம் 250கிமீ தூரம் பாய்ந்து தாக்கும் பலம்மிக்க ஏவுகணைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

குப்பை மேடு....

குப்பை மேடு....

இப்போதுள்ள நிலைமையுடன் ஒப்பிடுகையில், கார்கில் போர் நடந்த சமயத்தில் என்.எச் -1 பகுதி, அதாவது தேசிய நெடுஞ்சாலை பகுதி -1 குப்பை மேடாக இருந்தது. தேசிய நெடுஞ்சாலை 1 பாதையின் மூலமாகவே, ராணுவ வீரர்களுக்கான தளவாடங்கள் மற்றும் பிற உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டன.

தாக்குதல்...

தாக்குதல்...

எனவே இந்திய ராணுவத்தின் பலத்தைக் குலைக்கும் வகையில், பாகிஸ்தான் இந்த தேசிய நெடுஞ்சாலையில் தாக்குதலை நடத்தியது.

மனோஜ் பாண்டே...

மனோஜ் பாண்டே...

இதேபோல், படாலிக் பகுதியில் காணப்படும் காலுபர் மற்றும் ஜுபார் மலைகளும் மிகவும் அபாயகரமானவை. ஆனால், அதே சமயம் இந்தியாவிற்கு முக்கிய அரணாகவும் இம்மலைகள் விளங்குவது மறுக்க இயலாதது. இந்த கலுபர் மலையை பிடித்து வைத்திருந்தது பாகிஸ்தான். ஆனால் கேப்டன் மனோஜ் பாண்டே தலைமையிலான அணியினர் தீரத்துடன் போராடி இதை மீட்டனர். இந்த சண்டையில் தனது உயிரைத் தியாகம் செய்தார் பாண்டே.

சல்யூட்...

சல்யூட்...

அதேபோல ஜுபார் மலையை மீட்டதில் பிகார் ரெஜிமென்ட் வீரர்களின் பங்கு முக்கியமானது. டிராஸ் பகுதிகளில் உள்ள மலைகளில் ஏறும்போது மூச்சு விடுவது ரொம்பக் கஷ்டமாக இருக்கும். ஆனால் அதையும் வென்று சாதனை புரிந்துள்ளனர் நமது வீரர்கள்.

English summary
In Dras, there are high scale mountains from 9,000 ft to 14,000 ft altitudes, where breathing becomes very difficult. But these are the same mountains where the brave soldiers like Captain Manoj Pandey, Vikram Batra, Anuj Nair and Vijayant Thapar and many others had defeated the Pakistani intruders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X