For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கணவர்களைக் காக்க கிட்னி தானம் – ஒருவர் தாலியை மற்றொருவர் காப்பாற்றிய மகத்துவம்!

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் சிறுநீரகம் பழுதடைந்த தங்களுடைய கணவர்களுக்காக சிறுநீரகங்களை மனமுவந்து தானம் செய்து தங்கள் கணவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர் இரண்டு பெண்கள்.

மும்பையை சேர்ந்தவர் ஹரீஷ் பண்டாரி. 43 வயதான இவருக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு சிறுநீரகம் பழுதடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் டயாலிசிஸ் செய்யப்பட்டு மரண வேதனையுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்.

மாற்று அறுவை சிகிச்சை:

மாற்று அறுவை சிகிச்சை:

நீண்ட நாள் உயிர்வாழ சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரே வழி என்று டாக்டர்கள் அறிவுரை வழங்கினார்கள்.

மனைவியின் தியாகம்:

மனைவியின் தியாகம்:

பொருத்தமான சிறுநீரகம் தானமாக கிடைக்காத நிலையில் கணவரின் உயிரை காப்பாற்ற தனது சிறுநீரகத்தை வழங்க முன் வந்தார் அவரது மனைவி ராக்கி.

ரத்த வகை வேறு:

ரத்த வகை வேறு:

டாக்டர்கள் ராக்கிக்கு பரிசோதனை மேற்கொண்டனர். ஆனால் ரத்தப்பிரிவு இருவருக்கும் வெவ்வேறாக இருந்ததால் பொருத்த முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்து விட்டனர்.

தவித்த ராக்கி:

தவித்த ராக்கி:

ஹரீஸ் பண்டாரிக்கு "பி நெகட்டிவ்". அவரது மனைவி ராக்கிக்கு "ஏ பாசிட்டிவ்". இதனால் கணவரை காப்பாற்ற முடியாமல் ராக்கி தவித்தார். இதே ரத்த பிரிவு கொண்ட யாராவது சிறுநீரகம் தானம் செய்தால் பிரச்சினை இல்லை என்றார்கள் டாக்டர்கள்.

ஓடிய நாட்கள்:

ஓடிய நாட்கள்:

ஒருவரிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். உனது ஒரு உறுப்பை தா என்று கேட்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் பண்டாரி குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்தனர்.

தேடிய மற்றொருவர்:

தேடிய மற்றொருவர்:

மும்பை மருத்துவமனை நிர்வாகம் சிறுநீரகம் தேவைப்படும் விபரத்தை பதிவு செய்து காத்திருந்தது. அப்போது குஜராத் மாநிலம் பரோபாவை சேர்ந்த ஷா என்பவரும் சிறுநீரகம் பாதிப்படைந்து மாற்று சிறுநீரகத்தை தேடி கொண்டிருப்பது பற்றி மும்பை ஆஸ்பத்திரிக்கு தகவல் கொடுத்தார்.

அங்கும் போராட்டம்:

அங்கும் போராட்டம்:

ஷாவின் மனைவி தீபிகாவுக்கு ரத்தப்பிரிவு "பி நெகடிவ்". அவரது கணவருக்கு "ஏ பாசிடிவ்". இதனால் அவரும் கணவரை காப்பாற்ற முடியாமல் போராடி கொண்டிருந்தார்.

ஒத்துப் போன சிறுநீரகம்:

ஒத்துப் போன சிறுநீரகம்:

தீபிகாவின் சிறுநீரகம் ராக்கியின் கணவருக்கும், ராக்கியின் சிறுநீரகம் தீபிகாவின் கணவருக்கும் ஒத்து போனது.

முழுமனதுடன் பரிமாற்றம்:

முழுமனதுடன் பரிமாற்றம்:

இதை அறிந்ததும் இரண்டு பெண்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தங்கள் கணவர்களின் உயிரை காப்பாற்ற சிறு நீரகங்களை பரிமாறி கொள்ள இரண்டு பெண்களும் முழு மனதுடன் சம்மதித்தனர்.

இடம் மாறிய சிறுநீரகங்கள்:

இடம் மாறிய சிறுநீரகங்கள்:

இதையடுத்து மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. எல்லாம் சரியானதும் ராக்கியின் சிறுநீரகம் தீபிகாவின் கணவருக்கும், தீபிகாவின் சிறுநீரகம் ராக்கியின் கணவருக்கும் பொருத்தப்பட்டது.

இதுதான் வாழ்க்கை:

இதுதான் வாழ்க்கை:

கொடுத்து வாழ் என்ற தாத்பரியத்தின்படி ஒருவர் கணவரின் உயிரை மற்றொருவர் காப்பாறி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர் இரு தம்பதிகளும்.

English summary
One got kidney from another one’s wife and feeling happy with wives. People from Mumbai do this organ donation great.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X