For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்ணாமூச்சி ஆடும் பருவமழை.. விவசாயம் பாதிப்பு: உணவு பொருட்கள் விலை உயரும் அபாயம்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் வடக்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் பருவமழை பொய்த்துவிட்டதால் உணவு உற்பத்தி குறைந்து உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் வடக்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் விவசாயம் அதிகம் இல்லாத தெற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.

பஞ்சாப்

பஞ்சாப்

பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் மழை நீர் பற்றாக்குறை 60 சதவீதமாக உள்ளது. சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக சுத்தமாக மழை பெய்யவில்லை.

விளைச்சல் பாதிப்பு

விளைச்சல் பாதிப்பு

அடுத்த 7 நாட்களுக்கு இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நெல், பருத்தி, தானிய பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்படும்.

மழை

மழை

உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் வழக்கத்தை விட மிக மிகக் குறைவாக மழை பெய்துள்ளது.

நீர்ப்பாசன வசதி

நீர்ப்பாசன வசதி

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விவசாய நிலங்களில் 95 சதவீதம் நிலங்களில் நீர்ப்பாசன வசதிகள் உள்ளன. ஆனால் பம்புசெட் உள்ளிட்டவற்றை இயக்க மின்சாரம், டீசல் தேவைப்படுவதால் தானியங்களை விளைவிக்க அதிக செலவாகலாம்.

விலை உயரும்

விலை உயரும்

பருவமழை பொய்த்துவிட்டதால் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
As monsoon fails in western, northern and central parts of India, agriculture has got affected which may result in increase in food prices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X