For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னது.. எங்க கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநாடு போயுள்ளார்களா? எனக்கு தெரியாதே... கர்நாடக முதல்வர் பதில்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: வட கர்நாடகாவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கர்நாடக ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநாடு சுற்றுப் பயணம் சென்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே எம்.எல்.ஏக்கள் வெளிநாடு சென்ற தகவலே தனக்கு தெரியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 20க்கும் மேற்பட்டோர் கடந்த 11ம்தேதி முதல் 15 நாள் சுற்றுப்பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

சுற்றுப் பயணத்தால் சர்ச்சை

சுற்றுப் பயணத்தால் சர்ச்சை

வட கர்நாடகாவில் தற்போது வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதைவிட்டுவிட்டு வட கர்நாடக பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏக்களும் இந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனிப்பட்ட பயணம்

தனிப்பட்ட பயணம்

எம்.எல்.ஏக்களுக்கு தலா ரூ.5 லட்சம் பயண செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும் இது அவர்கள் தனிப்பட்ட பயணமாக கூறப்படுகிறது. இதற்காகும் செலவை, மின்சார துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் ஏற்றுள்ளார்.

எம்.எல்.ஏக்களை வளைக்கவா?

எம்.எல்.ஏக்களை வளைக்கவா?

சிவகுமார் கனிம குவாரிகள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் மிகுந்த செல்வம் ஈட்டியுள்ள அமைச்சராகும். சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு, தான் அந்த பதவிக்கு வர வேண்டும் என்பது சிவகுமாரின் திட்டமாக உள்ளதாக கூறப்படுகிறது.

என்கிட்ட சொல்லலியே

என்கிட்ட சொல்லலியே

இந்நிலையில்தான், எம்.எல்.ஏக்களுக்களை சுற்றுப்பயணத்துக்கு அனுப்பியுள்ளார் சிவகுமார். இது சித்தராமையா மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்களுக்கு எரிச்சலூட்டியுள்ளது. பெங்களூரில் இன்று செய்தியாளர்கள் இதுகுறித்து சித்தராமையாவிடம் கேள்வி எழுப்பினர். அப்போது தன்னிடம் யாரும் சொல்லிக் கொண்டு வெளிநாடு செல்லவில்லை. எனவே நான் பாதியிலேயே அவர்களை திரும்ப அழைக்க முடியாது என்று சித்தராமையா காட்டமாக பதில் அளித்தார்.

அதெல்லாம் நாங்க பார்த்துக்கொள்வோம்

அதெல்லாம் நாங்க பார்த்துக்கொள்வோம்

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை எடுக்க எம்.எல்.ஏக்கள் இல்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர், அதற்குத்தான் நாங்கள் இருக்கிறோமே, நாங்களே பார்த்துக்கொள்வோம் என்று பதிலளித்தார். நிருபர்களின் கேள்விக்கு மிகுந்த கோபத்துடனேயே சித்தராமையா பதிலளித்துவிட்டு காரில் கிளம்பி சென்றார்.

அமைச்சர்கள் ஸ்ரீநிவாச பிரசாத், ஆஞ்சநேயா, ரமானாத் ரை போன்றோரும் எம்.எல்.ஏக்கள் சுற்றுப்பயணத்தை விமர்சனம் செய்துள்ளனர்.

English summary
A foreign junket, taken by some Congress leislators “at their own cost” at a time when the northern part of the State is reeling under floods, has now snowballed into a controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X