For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பத்திரிகையாளர் அத்வானி, ஆலோசகர் ராகுல்காந்தி- நாடாளுமன்ற வெப்சைட் குளறுபடி

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: அத்வானி ஒரு பத்திரிகையாளர், ராகுல்காந்தி ஒரு அறிவுரையாளர் என்று நாடாளுமன்றத்தின் வெப்சைட்டில் தகவல் இடம் பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நரேந்திரமோடி தலைமையில் 16வது நாடாளுமன்றம் சமீபத்தில் அமைந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற அலுவல் வெப்சைட்டில், எம்.பிக்கள் அனைவரின் விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டது. சபாநாயகரின் கட்டுப்பாட்டுக்கு கீழேயுள்ள நாடாளுமன்ற வெப்சைட் பராமரிப்பு துறை தனது பதிவேற்றத்தின்போது மிகப்பெரிய தவறுகளை நிகழ்த்தியுள்ளது.

இதில் பாஜக மூத்த தலைவரும், எம்.பியுமான அத்வானியை பத்திரிகையாளர் என்று குறிப்பிட்டுள்ளனர். ராகுல்காந்தியை, திட்ட அறிவுரையாளர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் அத்வானி என்பவர், சபாநாயகர் சுமித்ரா மகாஜனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

Lok Sabha website names L K Advani a journalist, Rahul Gandhi a strategy consultant

இதுகுறித்து அவர் கூறுகையில், "பிரதமர் நரேந்திரமோடி குறித்த தகவலும் வெப்சைட்டில் முழுமையாக இல்லை. பிரதமர் அலுவலக தொலைபேசி எண், இ-மெயில் முகவரி போன்றவற்றையும் வெப்சைட்டில் இணைக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்துள்ளேன். மோடியும் ஒரு எம்.பி.தான். பிற எம்.பிக்கள் விவரம் இருக்கும்போது மோடிக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு" என்றார்.

English summary
The Lok Sabha website has not stated BJP veteran leader LK Advani and Congress vice-president Rahul Gandhi as politicians but as a journalist and a strategy consultant. The profession of both the leaders has not been mentioned as politics despite the fact that they both are members of the 16th Lok Sabha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X