For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்க்சிஸ்ட் கட்சி- திரிணாமுல் கூட்டணி அமைக்க நான் ரெடி: மமதா அதிரடி அறிவிப்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க அரசியலில் புதிய திருப்பமாக பரம எதிரியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறது என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி.

பீகாரில் எதிரும் புதிருமாக 20 ஆண்டுகாலம் இருந்து வந்த நிதிஷ்குமாரும் லாலு பிரசாத் யாதவும் கை கோர்த்து அம்மாநில சட்டசபை இடைத்தேர்தலை எதிர்கொண்டனர். தேர்தல் நடைபெற்ற 10 தொகுதிகளில் 6ஐ நிதிஷ்-லாலு கூட்டணி அள்ளியது. பாஜகவுக்கு 4 தொகுதிகள்தான் கிடைத்தன.

நிதிஷ்-லாலு உருவாக்கிய பார்முலா இப்போது பல மாநிலங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் கால் நூற்றாண்டு கால இடதுசாரிகள் ஆட்சியை வீழ்த்திய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, இப்போது பாஜகவை வீழ்த்த மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Mamata willing to consider tie-up with CPI-M if it so proposes

வங்கமொழி தொலைக்காட்சி ஒன்றுக்கு மமதா பானர்ஜி அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:

  • பீகாரில் லாலுஜி, நிதிஷ்ஜி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். லோக்சபா தேர்தலில் இந்த கூட்டணி அமைந்திருந்தால் அமோக வெற்றி கிடைத்திருக்கும்.
  • மேற்கு வங்கத்திலும் அதே போன்ற ஒரு நிலை உருவாவதாக நினைக்கிறேன். அரசியலில் எவரும் தீண்டத்தகாதவர் இல்லை.
  • இடதுசாரி கட்சிகளில் ஒன்றான சோசியலிஸ்ட் யுனைட்டி சென்டருடன் கூட நாங்கள் கூட்டணி வைத்திருந்தோம்.
  • மார்க்சிஸ்ட்- திரிணாமுல் கூட்டணி குறித்து பேசுவதற்கு யார் முன்வந்தாலும் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்.
  • ஜனநாயகத்தில் இத்தகைய கூட்டணி பேச்சுவார்த்தைக்கான கதவுகளை நாங்கள் மூடிவிடவில்லை.
  • இடதுசாரிகளை நான் ஒருபோதும் வெறுத்தது இல்லை. இடதுசாரிகளில் நல்ல மனிதர்கள் பலரும் இருக்கின்றனர்.
  • இடதுசாரி அல்லது வலதுசாரி என்று முத்திரை குத்தப்படுவதைவிட முற்போக்காளர், வளர்ச்சிக்கான மனிதர், மக்களுக்கான மனிதர் என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறேன்.
  • 2009ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக ஒரு இடத்தில்தான் வென்றது. தற்போது கூடுதலாக ஒரு இடத்தில் வென்றுள்ளது. அதை வன்முறை மூலம்தான் பாஜக பெற்றது.பாஜகவில் வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றோர் இருந்த போது கூட்டணி அமைத்தோம். ஆனால் இப்போது இருக்கும் புதிய அணி, அரசியலை கெடுத்துதான் வைக்கிறது.
English summary
Averring that no one is “untouchable”, West Bengal Chief Minister Mamata Banerjee Friday said her Trinamool Congress would consider and discuss the matter if a proposal for a tie-up came from her long-time foe CPI-M.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X