For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திரா காந்தி காலத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை ஏற்க தயங்கிய மன்மோகன் சிங்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை ஏற்க முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தயக்கம் காட்டியதாக அவரது மகள் எழுதிய புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் மகள் தமன்சிங், ‘முற்றிலும் அந்தரங்கம்: மன்மோகன் மற்றும் குர்சரண்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்புத்தகத்தில் மன்மோகன்சிங் குறித்த பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

'Manmohan Singh sought a soft job, but Indira Gandhi did not agree'

தமன்சிங் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

  • 6வது திட்டக் குழுவின் (1980-85) உறுப்பினராக மன்மோகன்சிங்கை நியமிக்க அப்போதைய பிரதமர் இந்திரா முடிவு செய்தார். ஆனால் அரசுப் பணியில் ஓய்வு பெற 10 ஆண்டுகாலம் இருக்கும் நிலையில் அப்பதவியை ஏற்க மன்மோகன்சிங் தயங்கினார்.
  • இதனால் திட்டக் குழு உறுப்பினர் செயலர் என்ற பதவியை மன்மோகனுக்காக இந்திரா காந்தி உருவாக்கினார். இதனால் மன்மோகன்சிங் அரசுப் பணியிலே நீடிக்கவும் வழி ஏற்பட்டது.
  • அதன் பின்னர் இரண்டரை ஆண்டுகள் கழித்து, மன்மோகன்சிங்கை ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்க இந்திரா காந்தி முடிவு செய்திருந்தார்.
  • இதை எதிர்பார்க்காத மன்மோகன்சிங், இந்திராவை நேரில் சந்தித்து, பல ஆண்டுகாலம் கடினமான பணிகளை செய்துவிட்டதால் இலகுவான பணி ஒன்றை விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.
  • மன்மோகன்சிங்கின் இந்த பதிலை கேட்டு புன்னகைத்த இந்திரா, உங்களுக்கு 50 வயதுதான் ஆகிறது.. இலகுவான பணி செய்ய நீங்கள் இன்னமும் இளைஞர்தான் என்று கூறியிருக்கிறார். (பின்னர் மன்மோகன்சிங் ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்றார்)
  • மன்மோகன்சிங் இளம்வயதில் மருத்துவராக விரும்பினார். இதற்காக அக்காலத்தில் மருத்துவ படிப்புக்கு முந்தைய படிப்பாக இரண்டு ஆண்டு காலம் எப்.எஸ்.சி. என்ற படிப்பை படிப்பதற்காக 1948-ம் ஆண்டு, அமிர்தசரசில் உள்ள கல்சா கல்லூரியில் மன்மோகன்சிங் சேர்க்கப்பட்டார்.
  • கல்லூரியில் சேர்ந்த இரண்டே மாதங்களில் மருத்துவ படிப்பில் மன்மோகன்சிங்குக்கு ஆர்வம் இல்லாமல் போய் விட்டதாம்.
  • பின்னர் தன்னுடை தந்தையின் கடையில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார் மகன்மோகன்சிங். அந்த கடையில் அவரை சமமாக நடத்தவில்லை. இதனால் மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படித்தார் மன்மோகன்சிங்,
  • பிரதமர் பதவி வகித்தபோது, ஒவ்வொரு நாளும் அலுவலகம் அவரோடு இணைந்தே இருந்தது. பெரிய துணியில் கட்டிய கோப்புகள் வீட்டுக்கு வரும். படுக்கையில் அமர்ந்தவாறு, மடியில் ஒரு தலையணையை போட்டுக்கொண்டு உட்கார்ந்து விடுவார். அவரது பக்கத்தில் கோப்புகள் குவியலாக இருக்கும்.

English summary
Manmohan Singh, who steered the UPA government for 10 years as prime minister, was looking for a 'soft' job in his 50s but was told by then prime minister Indira Gandhi to become the governor of the Reserve Bank of India as he was "too young to do a soft job", a new book by his daughter has revealed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X