For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவா புதிய முதல்வராக பதவியேற்றார் லட்சுமிகாந்த் பர்சேகர்!

By Mathi
Google Oneindia Tamil News

பனாஜி / டெல்லி: கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த லட்சுமிகாந்த் பர்சேகர் இன்று பதவியேற்றார்.

மத்திய அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது. கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர், பாதுகாப்பு துறை அமைச்சராக பதவியேற்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

 Laxmikant Parsekar sworn in as Goa's next chief minister

இது தொடர்பாக டெல்லியில் இன்று பாஜகவின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனோகர் பாரிக்கர் கலந்து கொண்டர்.

இதனைத் தொடர்ந்து தமது முதல்வர் பதவியை மனோக்கர் பாரிக்கர் ராஜினாமா செய்தார். பின்னர் அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சரான லட்சுமிகாந்த் பர்சேகர் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மாலை 4 மணி அளவில் கோவா ஆளுநர் மிர்துளா சின்ஹா, லட்சுமிகாந்த் பர்சேகருக்கு அம்மாநில முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஏற்கெனவே துணை முதல்வராக உள்ள டிசோசா, லட்சுமிகாந்த் பர்சேகருக்கு கீழே தம்மால் பணியாற்ற முடியாது; பாஜகவை விட்டு 12 எம்.எல்.ஏக்களுடன் வெளியேறுவேன் என்று மிரட்டிக் கொண்டிருந்தார்.

ஆனாலும் பாஜக மேலிடம் அவரது கோரிக்கையை நிராகரி இதனால் டிசோசா தொடர்ந்து துணை முதல்வராக நீடிப்பார். அவர் உட்பட 9 பேர் கேபினட் அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

English summary
Laxmikant Parsekar sworn-in as Goa Chief Minister. Nine other Ministers also take oath.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X