For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”லோக்சபா தேர்தலின்போது தொடர் தற்கொலை படை தாக்குதல்”-தீவிரவாதி மசூத் அசார் திட்டம்

Google Oneindia Tamil News

Masood Azhar planning suicide attacks in India during election rallies…
டெல்லி: இந்தியாவில் மீண்டும் தற்கொலை படைத்தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் அசார் திட்டமிட்டிருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

1999ஆம் ஆண்டில் கந்தகார் விமான கடத்தலின் போது மத்திய அரசால் விடுவிக்கப்பட்ட மூன்று தீவிரவாதிகளில் ஒருவர்தான் இந்த மெளலானா மசூத் அசார். இவரது தீவரவாத அமைப்புதான் ஜெய்ஸ் இ முகமது (ஜேஇஎம்). இந்த அமை்பபுதான் 2001ம் ஆண்டு நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இவர் தீவிரவாத செயல்களில் மும்முரமாகியுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதைச் சீர்குலைக்கும் வகையில் தேர்தல் பிரசாரங்களில் குண்டுவெடிப்பு, தற்கொலைப் படைத் தாக்குதல்களை நடத்த இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.ட்டமிட்டுள்ளனர்.

அதேபோல அசாரின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வரும் உளவுத்துறை, இந்த அமைப்பினர் விமான கடத்தலிலும் ஈடுபடலாம் என எச்சரித்துள்ளது. ஜேஇஎம்மின் தலைமையகம் பாகிஸ்தானின் பகவல்பூரில் உள்ளது. அங்குதான் தற்கொலைப் படையினருக்கும், விமானக் கடத்தல்காரர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது.

உளவுத்துறையின் அறிக்கையின் படி அசார், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபர்பாத்தில் சமீபத்தில் ஒரு ரகசியக் கூட்டத்தை நடத்தியுள்ளார். அதில் ஏராளமான தீவிரவாதிகள் கலந்து கொண்டுள்ளனர். அவரிடம் ஒரு தற்கொலைப் படை அணியே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அவர் இந்தியாவிற்கு எதிரான ஜிகாத் போராட்டதிற்கு நேரம் நெருங்கி விட்டதாகவும்,313 தற்கொலை படை வீரர்கள் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாகவும்,விருப்பப்பட்டால் அவரால் 3000 தற்கொலை படை வீரர்களை கூட திரட்ட முடியும் என்றும் தனது அமை்பபினரிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த 1994ஆம் ஆண்டு போலி பாஸ்போர்ட் மூலம் தப்பிசெல்ல முயன்ற அவரை இந்திய ராணுவம் காஷ்மீரில் கைது செய்தது என்பது நினைவிருக்கலாம்..

மசூத் அசார் மீண்டும் தீவிரமாக செயல்பட ஆரம்பித்திருப்பது மிகுந்த கவலைக்குறிய விசயமாகும் என உளவுத்துறை முன்னாள் தலைமை அதிகாரி டி.கே.டோவல் கூறியுள்ளார்.

English summary
Maulana Masood Azhar, one of the three terrorists released by India on the last day of 1999 to end the Kandahar hijack, is back in action. A flurry of intelligence reports have warned that Jaish-e-Mohammad (JeM), the terror group created by Azhar after his release which is responsible for the attack on Parliament in 2001, is planning a wave of suicide attacks at rallies across India as the Lok Sabha campaign .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X