For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இவர்தான் ஜெயலலிதா ஜாமீன் மனுவை விசாரிக்கப் போகும் கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி!

Google Oneindia Tamil News

Meet the judge, who is going to decide on the bail plea of Jayalalitha and 3 others tomorrow
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு உள்ளிட்ட 3 மனுக்களை நாளை விசாரிக்கப் போகும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ரத்னகலா சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் பிரபலமான வழக்கறிஞராக ஆரம்ப காலத்தில் திகழ்ந்தவர் ஆவார்.

பெங்களூர் தனி கோர்ட் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்யவும், தண்டனையை நிறுத்தி வைக்கவும், ஜாமீன் அளிக்கக் கோரியும் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை நாளை விடுமுறை கால நீதிபதி ரத்னகலா விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ரத்னகலா குறித்த விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. 1982ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி முதல் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார் ரத்னகலா. சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் திறம்பட செயல்பட்டவர். 1996ம் ஆண்டு மாவட்ட செஷன்ஸ் நீதிபதியாக உயர்ந்தார்.

பெங்களூர், ஷிமோகா ஆகிய மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். அதேபோல ஷிமோகா, சிக்மகளூர், பெங்களூர் ஊரக மாவட்டம் ஆகியவற்றில் முதன்மை செஷன்ஸ் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக 2013ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி முதல் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.

English summary
Justice Rathnakala, is going to decide on the bail plea of Jayalalitha and 3 others tomorrow in the Karnataka HC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X