For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இறந்துவிட்டால் சட்டவிரோதம் இல்லை; பிழைத்துக் கொண்டால் அது சட்ட விரோதம்!

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் உள்ள சில முட்டாள்தனமான சட்டங்களை திருத்துமாறு குழு ஒன்றுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி அமைத்து 100 நாட்கள் ஆனதை கொண்டாடுகிறது. இந்நிலையில் மோடி நாட்டில் உள்ள முட்டாள்தனமான சட்டங்களை திருத்துமாறு குழு ஒன்றுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் உள்ள லட்சக்கணக்கான சட்டங்களில் முட்டாள்தனமான, தேவையில்லாத சட்டங்களை தேடிக் கண்டுபிடிப்பதே அந்த குழுவுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது.

Modi's biggest challenge: Stupid laws of India, what's that? Explained

இந்தியாவில் உள்ள சில முட்டாள்தனமான, தேவையில்லாத சட்டங்களில் சில,

  • கிழக்கு பஞ்சாப் விவசாய பூச்சிகள், நோய்கள் மற்றும் களைகள் சட்டம் 1949: இந்த சட்டத்தின்படி டெல்லி நகருக்குள் வெட்டுக்கிளிகள் படையெடுத்தால் மேளம் தட்டி அதை விரட்டுங்கள் என்று அரசு தெரிவித்து அதை ஏற்காவிட்டால் டெல்லிக்காரர்கள் ரூ. 50 அபராதம் செலுத்த வேண்டும்.
  • இந்திய விமான சட்டம் 1934: உரிமம் இல்லாமல் பட்டம் விட்டால் கைது தான். இந்தியாவில் ஒருவர் பட்டம் செய்ய, வைத்துக் கொள்ள, விற்பனை செய்ய, பறக்க விட உரிமம் தேவை. இந்த விதிமுறை விமானத்திற்கும் பொருந்தும்.
  • பொழுதுபோக்கு இடங்கள் கட்டுப்பாடு மற்றும் உரிமம் சட்டம் 1960: ஒரே இடத்தில் 10 ஜோடிகளுக்கு மேல் ஆடினால் அவர்கள் கைது செய்யப்படலாம்.
  • இந்திய புதையல் சட்டம் 1878: உங்களுக்கு ரூ.10 உள்பட எந்த புதையல் கிடைத்தாலும் அதை போலீசில் தெரிவிக்காவிட்டால் சிறை தான்.
Modi's biggest challenge: Stupid laws of India, what's that? Explained
  • அரசு ரகசியங்கள் சட்டம் 1923: அரசு அலுவலகங்கள் குறித்த தகவல்களை கசியவிடும் அதிகாரிகள், பொது மக்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
  • இந்திய மெஜாரிட்டி சட்டம் 1875: எந்த ஒரு ஆணும் 21 வயதுக்கு முன்பு திருமணம் செய்ய முடியாது. ஆனால் 18 வயதில் தந்தை ஆகலாம். அதாவது 18 வயது நிரம்பிய ஆண் ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம்.
  • இந்திய தண்டனை சட்டம் 1860, பிரிவு 497: திருமணமான பெண்கள் கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு எதிராக நீதித்துறை நடவடிக்கை எடுக்க முடியாது. அதே சமயம் திருமணமான ஆண் அதுவும் மாற்றான் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திருமணமான ஆண்கள் கன்னிப் பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்தால் அது சட்டவிரோதம் ஆகாது.
  • இந்திய தண்டனை சட்டம் 309: தற்கொலை செய்து இறந்துவிட்டால் அது சட்டவிரோதம் இல்லை. ஆனால் பிழைத்துக் கொண்டால் அது சட்ட விரோதம். அதவாது தற்கொலைக்கு முயற்சி செய்வது சட்ட விரோதம்.
English summary
Ahead of completing 100 days at the centre, Prime Minister Narendra Modi approved constitution of a Committee which would review existing laws in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X