For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பீகாரில் மோடி பிரசாரம்: மாவோயிஸ்டுகள் முழு அடைப்பு- மொபைல் டவர்கள் தகர்ப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

ராஞ்சி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று பிரசாரம் மேற்கொள்ளும் நிலையில் பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் 2 இடங்களில் மொபைல் டவர்களை மாவோயிஸ்டுகள் தகர்த்துள்ளதால் பதற்றம் நீடித்து வருகிறது.

லோக்சபா தேர்தலையொட்டி நாடு முழுவதும் நரேந்திர மோடி தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தின் லோஹார்டாகா, சட்ரா மற்றும் பீகாரின் சாசரம், கயா தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

Modi’s rally in Bihar,Jharkhand, Maoists give bandh call

அதே நேரத்தில் தமது இயக்க போராளிகள் 10 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கயா பகுதியில் மாவோயிஸ்டுகளும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர். இந்நிலையில் கயா மாவட்டத்தில் 2 இடங்களில் செல்போன் டவர்களை மாவோயிஸ்டுகள் தகர்த்திருக்கின்றனர்.

இதனால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

English summary
Gujarat Chief Minister and BJP’s prime ministerial candidate Narendra Modi will address rallies today at Lohardaga (Jharkhand), Chatra (Jharkhand) ,Sasaram(Bihar) and Gaya(Bihar). Sasaram and Gaya, both the rally venues of Modi in Bihar are in Naxal-infested districts, which have witnessed several violent incidents in the recent past. he Maoists have called a bandh at Sasaram and Gaya on Modi’s rally day to protest against the killing of 10 of their cadres in Chatra recently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X