For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்களின் போன்களைப் போய் ஒட்டுக் கேட்கிறீர்களே மோடி.. ராகுல் சாடல்

|

புனே: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பெண்களுக்கு அதிகாரம் கொடுப்பதாக கூறிக் கொண்டு அவர்களின் போன்களை ஒட்டுக் கேட்கும் வேலையில் ஈடுபடுகிறார் என்று சாடியுள்ளார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.

புனேவில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் இப்படிக் குற்றம் சாட்டினார் ராகுல் காந்தி.

பெண்களின் போன்களை ஒட்டுக் கேட்பதும், அவர்களைப் பின் தொடர்ந்து வேவு பார்ப்பதுமாக குஜராத் மோசமாக உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தியின் பேச்சிலிருந்து....

போன்களை ஒட்டுக் கேட்கும் மோடி

போன்களை ஒட்டுக் கேட்கும் மோடி

குஜராத் முதல்வர் தனது மாநிலப் பெண்களின் போன்களை ஒட்டு கேட்கிறார். போலீஸாரோ, பெண்களை பின் தொடர்ந்து வேவு பார்க்கிறது.

பெண்களை முதலில் மதியுங்கள்

பெண்களை முதலில் மதியுங்கள்

இவர்கள் முதலில் பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பிறகு அதிகாரம் கொடுக்கலாம்.

பாஜக மாநிலங்களில் பெண்கள் நிலை மோசம்

பாஜக மாநிலங்களில் பெண்கள் நிலை மோசம்

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் நிலை மோசமாக உள்ளது.

20,000 பெண்கள் மாயம்

20,000 பெண்கள் மாயம்

உதாரணத்திற்கு சட்டிஸ்கர் மாநிலத்தில் 20,000 பெண்கள் காணாமல் போயுள்ளனர்.

இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் பாஜகவினர்

இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் பாஜகவினர்

நாங்கள் பெண்களுக்கு அதிகாரம் வழங்க பாடுபடுகிறோம். ஆனால் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்த்தது பாஜக.

ஒரு கூட்டத்துக்கு ரூ. 10 கோடி செலவு

ஒரு கூட்டத்துக்கு ரூ. 10 கோடி செலவு

மோடியின் ஒரு கூட்டத்துக்கு ரூ. 10 கோடி வரை செலவிடுகிறார்கள். மேலும் பத்திரிக்கை விளம்பரங்களுக்காக கோடி கோடியா கொட்டுகிறார்கள் என்றார் ராகுல் காந்தி.

English summary
In an apparent reference to the snooping scandal, Congress Vice-President Rahul Gandhi today attacked Narendra Modi alleging that the Gujarat Chief Minister, who spoke about women empowerment, was "tapping" phones of women in the state. "The Gujarat Chief Minister taps phones of women. The police in the state stalk women. They should first learn to respect women before talking about their empowerment," Rahul said while addressing an election rally here in support of Congress candidate Vishwajeet Kadam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X