For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலை: ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக 16 சிறப்பு ரயில்கள்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக மேலும் 16 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து, திருவனந்தபுரம் மண்டல ரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது:

''கொல்லத்தில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண். 07506) அடுத்த மாதம் (டிசம்பர்) 8, 15, 12 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 5.55 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11.45 மணிக்கு திருப்பதி சென்றடையும்.

இதேபோல், ஐதராபாத்தில் இருந்து கொல்லம் செல்லும் சிறப்பு ரயில் (07109/07110) அடுத்த மாதம் 3 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 17 ஆம் தேதி வரை இயக்கப்படும்.

More special trains for Sabarimala

ஐதராபாத்தில் இருந்து கொல்லம் செல்லும் இன்னொரு சிறப்பு ரயில் (07115/07116) அடுத்த மாதம் 13 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 18 ஆம் தேதி வரை இயக்கப்படும்

நிஜாமாபாத்-கொல்லம் சிறப்பு ரயில் (07613/07614) டிசம்பர் 22 மற்றும் 24 ஆம் தேதிகளில் இயக்கப்படும். காகிநாடா-கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் (எண்.07211/07212) டிசம்பர் 12 ஆம் தேதி முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை இயக்கப்படும்.

அதுபோல் நரசப்பூர்-கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் (எண். 07217/ 07218), விஜயவாடா-கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் (எண்.07219/07220), மசூலிப்பட்டணம்-கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் (எண்.07221/07222) உள்பட 16 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது'' எனக் கூறப்பட்டுள்ளது.

English summary
More trains have been announced for the Sabarimala season. Advance reservation for the following trains will commence on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X