For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியுடன் செல்வதைத் தவிர்த்த ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி

Google Oneindia Tamil News

மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயணத்தில் முக்கிய சலசலப்பாக மோடியுடன் சென்ற குழுவில் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி உடன் செல்லாதது அமைந்துள்ளது.

உலகின் மிகப் பெரிய மகா கோடீஸ்வரர்களில் ஒருவராகத் திகழ்பவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியின் அதிபரும் ஆவார். ஆனால் இவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் ஆதரவு வட்டத்தில் இருப்பவர் என்பதால் மோடியின் ஜப்பான் பயணத்தில் இவர் இடம் பெறவில்லை.

மோடியுடன் சென்ற வர்த்தகக் குழுவில் முகேஷ் இடம் பெறவில்லை. முன்கூட்டியே பல நிகழ்ச்சிகளுக்கு ஒத்துக் கொண்டு விட்டதால் மோடியுடன் செல்லவில்லை என்று ரிலையன்ஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மோடியின் முதல் ஜப்பான் பயணம்

மோடியின் முதல் ஜப்பான் பயணம்

பிரதமரான பின்னர் முதல் முறையாக ஜப்பானுக்குச் சென்றுள்ளார் மோடி. அவருடன் பல தொழிலதிபர்கள் அடங்கிய வர்த்தகக் குழுவும் ஜப்பான் வந்துள்ளது.

அடானிக்கு முக்கியத்துவம்

அடானிக்கு முக்கியத்துவம்

மோடி தரப்புக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் அடானி குழுமத் தலைவர் கெளதம் அடானி, பார்தி நிறுவனத் தலைவர் சுனில் பார்தி மிட்டல், எஸ்ஸார் குழுமத் தலைவர் சசி ரூயா, விப்ரோ தலைவர் ஆஸிம் பிரேம்ஜி, ஐசிஐசிஐ தலைமை செயலதிகாரி சந்தா கோச்சார் உள்ளிட்டோர் மோடியுடன் ஜப்பான் வந்துள்ளனர்.

மாருதி தலைவர் பார்கவா

மாருதி தலைவர் பார்கவா

மாருதி சுஷுகி நிறுவன தலைவர் ஆர்.சி. பார்கவா, கிரண் மஜூம்தார், உள்ளிட்டோரும் மோடியுடன் வந்துள்ளனர்.

முகேஷ் மிஸ்ஸிங்

முகேஷ் மிஸ்ஸிங்

இதில் முகேஷ் மட்டும்தான் மிகப் பெரிய மிஸ்ஸிங் ஆவார். இதற்கான காரணத்தை அரசுத் தரப்பும், ரிலையன்ஸ் தரப்பும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. அதேசமயம், முன்கூட்டிய சில நிகழ்ச்சிகள் முடிவு செய்யப்பட்டு விட்டதால் முகேஷால் வர முடியவில்லை என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அடானிதான் காரணமா...

ஆனால் அடானிதான் காரணமா...

ஆனால் அடானியுடன் சேர்ந்து போவதையும், பாஜக முத்திரை தன் மீது விழுவதையும் தவிர்க்கவே முகேஷ் போகவில்லை என்று தெரிகிறது.

காங்கிரஸுக்கு அம்பானி- பாஜகவுக்கு அடானி

காங்கிரஸுக்கு அம்பானி- பாஜகவுக்கு அடானி

கடந்த லோக்சபா தேர்தலின்போது பாஜகவுக்கு அடானிதான் செலவுகளைப் பார்த்துக் கொண்டதாகவும், பெருமளவில் பொருளதவி அளித்ததாகவும் சர்ச்சைகள் வெடித்தன. இதை வைத்து காங்கிரஸுக்கு அம்பானி, பாஜகவுக்கு அடானி என்று சமூக வலைத்தளங்களிலும் கூட கருத்துக்கள் உலா வந்தன என்பது நினைவிருக்கலாம்.

English summary
Mukesh Ambani, the world's richest energy billionaire and head of Reliance Industries, is not be there in business delegation which has accompanied Prime Minister Narendra Modi to Japan. Ambani, who was to be part of a group of industrialists accompanying Modi on his first major bilateral visit, outside the sub-continent, sent regrets, government sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X