For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேப்பருக்கு “நோ” – ஐபேட்க்கு “எஸ்” – காகிதமின்றி நடக்கும் ஆந்திர அமைச்சரவைக் கூட்டம்!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: நாட்டிலேயே முதல் முறையாக முழுவதும் காகிதப் பயன்பாடற்ற முதல் அமைச்சரவைக் கூட்டம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் இன்று நடக்கிறது.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி நடக்கிறது.

நவீன தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் காட்டும் நாயுடு தன் முந்தைய ஆட்சி காலத்தில் ஹைதராபாத்தை தகவல் தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சி அடைய வைத்தார்.

தெலுங்கானா மாநிலம்:

தற்போது தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளதால் இன்னும் 10 ஆண்டுகளில் ஹைதராபாத் தெலுங்கானாவுக்கு மட்டுமே சொந்தம் என்ற நிலை உருவாகும்.

புதிய தலைநகர் பணி:

இதனால் ஆந்திராவுக்கான புதிய தலைநகரம் அமைக்கும் பணியில் நாயுடு தீவிரம் காட்டி வருகிறார். விஜயவாடா அருகே அமையவுள்ள புதிய தலைநகரை ஹைதராபாத்துக்கு இணையாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

முதல் அமைச்சரவைக் கூட்டம்:

இதற்கிடையே நாயுடு தலைமையிலான, இந்த வருடத்திற்கான முதல் அமைச்சரவை கூட்டம் ஹைதராபாத்தில் இன்று நடக்கிறது.

அமைச்சர்களுக்கு ஐ-பேட்:

இது முழுவதும் காகிதப் பயன்பாடற்ற கூட்டமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அமைச்சர்களுக்கும் ஐ - பேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

காகிதமற்ற கூட்டம்:

இதன் மூலம் அனைவரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து மற்றவர்களின் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வர்.

எலக்ட்ரானிக் மயமான அமைச்சரவை:

நாட்டிலேயே முதல் முறையாக முழுவதும் காகிதப் பயன்பாடற்ற எலக்ட்ரானிக் மயமான முறையில் நடத்தப்படும் அமைச்சரவைக் கூட்டம் என்ற பெருமையை இந்த கூட்டம் பெறவுள்ளது.

English summary
No paper uses in the first cabinet ministry meet in Hyderabad. Chandra babu naidu provided IPAD to all of the ministers for communication.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X