For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வடமாநிலங்களில் வரலாறு காணாத வாக்குப்பதிவு... மேற்கு வங்கத்தில் 82%

|

டெல்லி: நேற்று நடந்த 6 வது கட்ட லோக்சபா தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு வடமாநிலங்களில் வாக்குப் பதிவு நடந்துள்ளது. தேசிய அளவில் இது சராசரியாக 66 சதவீத ஓட்டுப்பதிவு என தெரிவிக்கப் பட்டுள்ளது.

16வது லோக்சபாவை நிர்மாணிக்க இருக்கும் 9 கட்டத் தேர்தலில் நேற்று 6ம் கட்டமாக 12 மாநிலங்களில் 117 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. இம்முறை அதிக வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்துள்ளனர். எனவே, வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.

Northern states records high voter turn out

இது தொடர்பாக நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி,

ராஜஸ்தானில் 5 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 59.64 சதவீதமும், தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 73 சதவீதமும், புதுவையில் உள்ள ஒரு தொகுதியில் 83 சதவீதமும் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், பீகாரில் 7 தொகுதிகளில் 60 சதவீதமும், சத்தீஸ்கரில் 7 தொகுதிகளுக்கு 62.5 சதவீதமும், அஸ்ஸாமில் 6 தொகுதிகளுக்கு 77.05 சதவீதமும், ஜார்கண்டில் 4 தொகுதிகளுக்கு 63.4 சதவீதமும் பதிவாகியுள்ளன.

அதேபோல், மத்தியப்பிரதேசத்தில் உள்ள 10 தொகுதிகளில் 64.4 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 6 தொகுதியில் 82 சதவீதமும், உத்திரப்பிரதேசத்தில் 12 தொகுதிகளுக்கு 58.58 சதவீதமும், மராட்டிய மாநிலத்தில் 19 தொகுதியில் 55.33 சதவீதமும் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

English summary
The National aggregate of voter turn out was 66% in the 6th phase of Lok Sabha election which held yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X